விளையாட்டு

ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா! தல தோனி ரசிகர்களுக்காக வெளியான உற்சாக தகவல்! இனி கொண்டாட்டம்தான்!

Summary:

dhoni participate in practise match at march 2

ஐபிஎல் சீசன் 13 வது தொடர் அடுத்த மார்ச் மாதம் 29 ஆம் தேதி துவங்க உள்ளது. மேலும் இந்த ஆண்டிற்கான போட்டி அட்டவணை  வெளியாகியுள்ள நிலையில், சென்னை சிஎஸ்கே அணி தீவிர பயிற்சி மேற்கொள்ள உள்ளது.

கடந்த ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை கிங்ஸ் கிங்ஸ் அணியுடன் மோதி மும்பை இந்தியன்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது. இந்நிலையில் தற்போது முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் மோத உள்ளது.

இந்நிலையில் கடந்த ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடியதற்குப்பிறகு எந்தவித சர்வதேச போட்டிகளிலும் டோனி கலந்து கொள்ளாததால், கடந்த ஏழு மாதங்களாக டோனி ரசிகர்கள் பெரும் ஏக்கத்தில் இருந்தனர். அதனை போக்கும் விதமாக  ஐபிஎல் பயிற்சிகளத்திற்கு தல தோனி எப்போது வருவார் என ரசிகர்கள் பெருமளவில் எதிர்பார்த்து காத்திருந்தனர்.

 இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை செயல் அதிகாரி விஸ்வநாதன் தோனி ரசிகர்களுக்கு உற்சாகமாக தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது சென்னை அணிவீரர்கள் மார்ச் 2 முதல் சேப்பாக்கம் மைதானத்தில்  பயிற்சியில் ஈடுபடவுள்ளனர். மேலும் மார்ச் 2 முதல் தல தோனியும் சென்னை மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளார். இதனால் தல தோனி ரசிகர்கள் பெரும் உற்சாகமடைந்துள்ளனர்.


Advertisement