விளையாட்டு

மீண்டும் மீண்டும் மெய்சிலிர்க்க வைக்கும் தோனி.. விமானத்தில் தோனி செய்த சுவாரஸ்ய சம்பவம்!

Summary:

Dhoni offered bussiness class seat to support staff

ஐபிஎல் 2020 தொடர் வரும் செப்டம்பர் 19 ஆம் தேதி யூஏஇயில் துவங்கவுள்ளது. இதற்காக அணி வீரர்கள் பலகட்ட கொரோனா பரிசோதனைக்கு பிறகு யூஏஇக்கு செல்கின்றனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சேர்ந்த இந்திய வீரர்கள், பயிற்சியாளர்கள், மருத்துவ குழுவினர், அணி நிர்வாகிகள் மற்றும் ஊழியர்கள் நேற்று சென்னை விமான நிலையத்தில் இருந்து துபாயக்கு தனி விமானத்தில் சென்றனர். 

நேற்றைய விமான பயணத்தின் போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி தனக்கு ஒதுக்கப்பட்டிருந்த பிஸினஸ் க்ளாஸ் சீட்டினை அணி ஊழியர்களில் ஒருவரான ஜார்ஜ் என்பவருக்கு கொடுத்துவிட்டு மற்ற வீரர்களுடன் எக்கனாமிக் க்ளாஸில் பயணித்துள்ளார்.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஜார்ஜ், "கிரிக்கெட்டில் பல சாதனைகளை படைத்த தோனி என்னிடம் வந்து உங்கள் கால்கள் நீளமாக உள்ளதால் நீங்கள் பிஸினஸ் க்ளாஸில் உள்ள எனது இருக்கையில் அமர்ந்துகொள்ளுங்கள், நான் எக்கனாமிக் க்ளாஸில் அமர்ந்துகொள்கிறேன் என கூறினார்" என கூறியுள்ளார்.


Advertisement