மிகவும் எளிமையாக கொண்டாடப்பட்ட தோனியின் பிறந்தநாள்! பிசிசிஐ வெளியிட்ட வீடியோ

மிகவும் எளிமையாக கொண்டாடப்பட்ட தோனியின் பிறந்தநாள்! பிசிசிஐ வெளியிட்ட வீடியோ


Dhoni birthday celebration

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் தற்போதைய விக்கெட் கீப்பருமான மகேந்திர சிங் தோனியின் பிறந்தநாள் இன்று ரசிகர்களால் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இங்கிலாந்தில் உலக கோப்பை தொடரில் ஆடிவரும் இந்திய அணியில் இடம் பெற்றிருக்கும் மகேந்திர சிங் தோனி தனது பிறந்தநாளை இந்திய வீரர்களுடன் மிகவும் எளிமையாக கொண்டாடியுள்ளார். நேற்று கடைசி லீக் போட்டியில் ஆடிய இந்திய அணி இலங்கையை தோற்கடித்தது.

MS Dhoni

அடுத்து உலக கோப்பையில் மிக முக்கியமான அரையிறுதி போட்டியில் இந்திய அணி ஆட இருப்பதால் தோனியின் பிறந்தநாள் கொண்டாட்டம் மிகவும் எளிமையாக கொண்டாடப்பட்டது. வீரர்கள் தங்கியிருந்த விடுதியிலேயே தோனி கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடினார். 

MS Dhoni

அந்த சமயத்தில் தோனியின் மனைவி மற்றும் மகள் இருவரும் கலந்து கொண்டனர். எப்பொழுதும் கேக்கை முகத்தில் பூசி கொண்டாடப்படும் பிறந்தநாள் போல இல்லாமல் மிகவும் அமைதியாக பிறந்தநாளை கொண்டாடியுள்ளார் மகேந்திர சிங் தோனி.