தல தோனியை போலவே ரன்-அவுட் செய்த தென் ஆப்பிரிக்க விக்கெட் கீப்பர்! மிரண்டு போன ஆஸ்திரேலிய வீரர்!
2019 உலகக்கோப்பை தொடரில் கடைசி லீக் போட்டிகள் நேற்று நடைபெற்றன. முதல் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது. இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலிய அணி தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஆடியது. ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற 326 ரன்களை தென் ஆப்பிரிக்கா இலக்காக நிர்ணயித்தது.
இதனை தொடர்ந்து ஆஸ்திரேலிய அணி 315 ரன்களுக்கு ஆள் அவுட் ஆனது. தென் ஆப்பிரிக்க அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. நேற்றைய போட்டியில் அஸ்திரடேலியா அணி பேட்டிங் செய்துகொண்டிருந்தபோது, வார்னர் ஒரு ரன் எடுக்க ஓடினார். அப்போது தென் ஆப்பிரிக்க வீரர் வேகமாக செயல்பட்டு, ஸ்டம்பை நோக்கி பந்தை எறிந்தார்.

அப்போது விக்கெட் கீப்பர் டி காக் ஸ்டெம்பை பார்க்காமலேயே அபாரமாக ரன்-அவுட் செய்தார். இதன்மூலம் மறுமுனையில் இருந்து ஓடிவந்த ஸ்டோய்னிஸ் ஆட்டமிழந்தார். இதேபோல இந்திய அணியின் தல தோனிதான் விக்கெட்டை வீழ்த்துவார் என ரசிகர்கள் இதுதொடர்பான வீடியோவை பகிர்ந்து வருகின்றனர்.
How De Kock ran out Stoinis after a wide throw from Rabada. Brilliant. pic.twitter.com/xdBzmt4Cv9
— Dean Oelschig (@DeanOelsch) July 6, 2019