ஆத்தாடி என்ன அடி... மீண்டும் கில்லராக மாறிய மில்லர்.! சுருண்டு விழுந்த சென்னை அணி.!

ஆத்தாடி என்ன அடி... மீண்டும் கில்லராக மாறிய மில்லர்.! சுருண்டு விழுந்த சென்னை அணி.!



david-miller-played-very-well-yesterday-match

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 15-வது சீசன் விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற  ஆட்டத்தில் குஜராத் அணியும், சென்னை அணியும் மோதியது. நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு  செய்தது.

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணி ஆரம்பத்தில் தடுமாறி முதல் 8 ஓவர்களில் 48 ரன்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்து தத்தளித்தது .

அடுத்து வந்த டேவிட் மில்லர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படத்தினார். அவருடன் ஜோடி சேர்ந்த ரஷித் கான் அதிரடியாக விளையாடினார். மில்லர் மற்றும் ரஷித் கான் இருவரும் சேர்ந்து சென்னை அணியின் பந்து வீச்சை துவம்சம் செய்தனர். ஆட்டத்தின் இறுதி ஓவரில் குஜராத் அணி வெற்றிக்கு 13 ரன்கள் தேவைப்பட்டது . ஜோர்டன் அந்த ஓவரை வீசினார். மில்லரின் அதிரடி ஆட்டத்தால் 19.5 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றி பெற்றது.