இந்தியா விளையாட்டு

சென்னை அணிக்கு எதிராக ஷிகர் தவான் ஆடிய ருத்ர தாண்டவம்! தகர்தெரியுமா சென்னை அணி??

Summary:

CSK vs Delhi match 2019 ipl

ஐபில் போட்டியின் 12 வது சீசன் ஆரம்பித்து இதுவரை நான்கு போட்டிகள் நடைபெற்றுளது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் நடைபெறுவரும் இந்த போட்டியானது தற்போது மேலும் சூடுபிடித்துள்ளது. சென்னையில் நடந்த முதல் ஆட்டத்தில் விறுவிறுப்பு இல்லாவிட்டாலும் சென்னை அணி முதல் ஆட்டத்தில் வெற்றி பெற்று ரசிகர்களை உற்சாகப்படுத்தியது.

ஐபில் போட்டியின் 12 வது சீசனில் இதுவரை நான்கு போட்டிகள் நடந்துள்ள நிலையில் இன்று ஐந்தாவது போட்டி நடைபெறவுள்ளது.  இன்று இரவு நடைபெறும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதுகின்றன. 

இந்தநிலையில்  டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். அதிரடியாக களமிறங்கிய டெல்லி அணி ஆரம்பத்திலே நிதானமாக ஆடியது. துவக்க மட்டையாளர்களான ஷிகர் தவான் மற்றும் ஷா சிறப்பாக விளையாடினர். பிரிதிவ் ஷா 16 பந்துகளுக்கு 24 ரன்கள் எடுத்து அவுட் ஆகி வெளியேறினார். 

csk 2019 க்கான பட முடிவு

இதனையடுத்து களமிறங்கிய ஸ்ரேயாஸ் அய்யர் 20 பந்துகளில் 18 ரன்கள் எடுத்து வெளியேறினார். இதனையடுத்து ஷிகர் தவானுடன் இணைந்து சிறப்பாக ஆடிய ரிஷாப் பண்ட் 13 பந்துகளுக்கு 25 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

துவக்க மட்டையாளராக களமிறங்கிய ஷிகர் தவான் சிறப்பாக ஆடி 47 பந்துகளில் 51 ரன்கள் எடுத்து அவுட் ஆகி வெளியேறினார். தவான் அவுட் ஆகிய பிறகு டெல்லி அணியின் ரன் வேகம் குறைந்தது. டெல்லி அணி 20 ஓவர்கள் நிறைவுற்ற நிலையில் 147 ரன்கள் எடுத்து 6 விக்கிட்டுகளை பறிகொடுத்துள்ளது. சென்னை அணிக்கு 148 ரன்களை இலக்காக வைத்துள்ளது டெல்லி அணி.
 


Advertisement