இந்தியா விளையாட்டு

ஐபிஎல் போட்டியில் விளையாட கர்ஜனையுடன் துபாய் புறப்படும் சென்னை சிங்கங்கள்!

Summary:

csk ready to go for ipl match

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடர், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது. வரும் செப்டம்பர் 19ஆம் தேதி ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஆரம்பமாகிறது. இதில் பங்கேற்பதற்காக ராஜஸ்தான் ராயல்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் துபாய் சென்றடைந்துள்ளன. பயணத்திற்கு முன்பு வீரர்கள் அனைவருக்கும் பலமுறை கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. 

இந்தநிலையில் சமீபத்தில் பயிற்சிக்காக சென்னை வந்த சிஎஸ்கே அணியினர் இன்று துபாய் செல்கின்றனர். சென்னை அணியின் கேப்டன் தோனி, ரெய்னா, ஜடேஜா உள்ளிட்ட 16 சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் அணி நிர்வாகிகள் தனி விமானத்தில்அழைத்து செல்லப் படுகின்றனர்.

வீரர்கள் மற்றும் ஊழியர்களுக்கு ஐந்து நாட்களுக்கு ஒருமுறை கொரோனா பரிசோதனை கட்டாயம் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது. பயணத்திற்கு முன்பாக வீரர்கள் மற்றும் ஊழியர்கள் சமூக வலைத்தளங்களில் தங்கள் புகைப்படங்களைப் பகிர்ந்து கொண்டனர். துபாய் சென்று இறங்கிய உடன் சென்னை அணி வீரர்களுக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிவித்தனர்.


 


Advertisement