விளையாட்டு

சிஎஸ்கேவின் புதிய ஜெர்சியை வெளியிட்டார் தோனி..! இணையத்தில் வைரலாகும் வீடியோ..

Summary:

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய ஜெர்சியை சென்னை அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி இன்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய ஜெர்சியை சென்னை அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி இன்று வெளியிட்டார்.

ஐபில் T20 போட்டிகள் அடுத்த மாதம் முதல் தொடங்க உள்ளது. கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக வெளிநாட்டில் நடத்தப்பட்ட ஐபில் போட்டிகள் இந்த முறை நமது நாட்டிலையே நடைபெற உள்ளது. கடந்த முறை மும்பை அணி கோப்பையை கைப்பற்றிய நிலையில், இந்த முறை ஐபில் கோப்பையை வெல்ல அனைத்து அணிகளும் தீவிர முயற்சியில் உள்ளது.

இந்நிலையில் சிறிது மாற்றங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ள சென்னை அணியின் புதிய ஜெர்சியை அணியின் கேப்டன் தோனி இன்று அறிமுகப்படுத்தினார். சென்னை சூப்பர் கிங்ஸின் டிவிட்டர் பக்கத்தில் வெளியாகியுள்ள இந்த விடியோவ்வில், அணியின் புதிய ஜெர்சியை அறிமுகம் செய்தபிறகு, சென்னை சூப்பர் கிங்ஸுக்கு பெரிய விசில் அடிங்க என்று தோனி அந்த வீடியோவில் கூறியுள்ளார்.

அடுத்த மாதம் தொடங்கும் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது முதல் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸை எதிர்கொள்கிறது. இந்த போற்றியது ஏப்ரல் 10-ம் தேதி நடைபெறுகிறது.


Advertisement