கொல்கத்தா அணி வீரர்களை தொடர்ந்து சென்னை அணியை சேர்ந்த 3 பேருக்கு கொரோனா பாதிப்பு.!

கொல்கத்தா அணி வீரர்களை தொடர்ந்து சென்னை அணியை சேர்ந்த 3 பேருக்கு கொரோனா பாதிப்பு.!


csk members affectd corona

ஐபில் 14 வது சீசன் T20 போட்டிகள் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இதுவரை 29 போட்டிகள் நடந்து முடிந்துள்ளநிலையில் இன்று நடக்கவிருந்த கொல்கத்தா - பெங்களூரு அணிகளுக்கு இடையே நடைபெற இருந்த ஆட்டம் திடீரென தள்ளிவைக்கப்பட்டது. கொல்கத்தா அணி வீரர்கள் வருண் சக்கரவர்த்தி, சந்தீப் வாரியர் ஆகிய இருவருக்கும் கொரோனா தொற்று உள்ளது கண்டறியப்பட்டது. 

இதனால் கொல்கத்தா - பெங்களூரு அணிகளுக்கு இடையே நடைபெற இருந்த இன்றைய போட்டியானது தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக இந்தியக் கிரிக்கெட் வாரியம் தெரிவித்தது. ஐபிஎல் போட்டியில் விளையாடும் வீரர்கள் கடுமையான பயோ பாதுகாப்பு வளையத்தில் உள்ளனர். இதையும் மீறி வீரர்கள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

corona

இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்  அணியைச் சேர்ந்த மூன்று பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். ஆனாலும் இவர்களில் வீரர்களில் யாரும் கொரோனாவால் பாதிக்கப்படவில்லை எனத் தெரிய வந்துள்ளது. சென்னை அணியின்  தலைமைச் செயல் அதிகாரி காசி விஸ்வநாதன், பந்துவீச்சுப் பயிற்சியாளர் பாலாஜி மற்றும் பேருந்து கிளீனர் ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.