யாருங்க அவரு..!! அந்த 20 வயது புது சிஎஸ்கே வீரரை பார்த்து மொத்த சென்னை அணியும் மெர்சலாகி கிடக்காம்!!

யாருங்க அவரு..!! அந்த 20 வயது புது சிஎஸ்கே வீரரை பார்த்து மொத்த சென்னை அணியும் மெர்சலாகி கிடக்காம்!!


CSK fazalhaq farooqi good performance in net bowling

சென்னை அணியின் மூத்த வீரர்களான தோனி, ரெய்னா போன்றோரையே கலங்கடித்துக்கொண்டிருக்கிறாராம் சிஎஸ்கே அணியின் புது இளம் வீரர் ஒருவர்.

ஐபில் சீசன் 14 T20 போட்டிகள் இன்றுமுதல் தொடங்குகிறது. இன்று நடைபெறும் ஆட்டத்தில் மும்பை அணி பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது. நாளைய ஆட்டத்தில் சென்னை அணி டெல்லி அணியுடன் விளையாடுகிறது. இந்நிலையில் கடந்த சீசனில் கடுமையாக சொதப்பிய சென்னை அணி இந்தமுறை கட்டாயம் கோப்பையை கைப்பற்றிய ஆகவேண்டும் என்ற திட்டத்தில் உள்ளது.

fazalhaq farooqi

இந்நிலையில் சென்னை அணியின் பயிற்சி ஆட்டங்களில் மிகவும் சிறப்பாக விளையாடிவருகிறாராம் சென்னை அணியின் நெட் பவுலராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஆப்கானிஸ்தானை சேர்ந்த இளம் வீரர் பசல்ஹாக் பருக்கி. ஆப்கானிஸ்தானை சேர்ந்த இவர் அதிகளவிலான சர்வதேச போட்டிகளில் விளையாடியது இல்லை.

ஆனால் ஆப்கானிஸ்தானின் முதல் தரப்போட்டிகளிலும், பல லீக் போட்டிகளிலும் இவர் சிறப்பாக விளையாடியுள்ளார். இவரது பந்து வீச்சில் ஈர்க்கப்பட்ட சென்னை அணியின் கேப்டன் தோனி இவரை சென்னை அணிக்கு நெட் பவுளராக அணியில் சேர்த்துள்ளார்.

இந்நிலையில் சென்னை அணி வீரர்களுக்கு பந்து வீசி வரும் இவர், மிக சிறப்பாக செயல்பட்டுவருகிறார். குறிப்பாக சென்னை அணியின் முக்கிய புள்ளிகளான தோனி, ரெய்னா விக்கெட்டுகளையே தட்டி தூக்கி வருகிறாராம் பசல்ஹாக் பருக்கி. இவரது பந்து வீச்சு திறனை பார்த்த மொத்த சிஎஸ்கே நிர்வாகமும் பயங்கர இம்ப்ரஸ் ஆகியுள்ளதாம்.

ஏற்கனவே சென்னை அணியில் இருந்து ஹாஸல்வுட் வெளியேறிவிட்டதால், அவருக்கு பதில் சென்னை அணி மாற்று வெளிநாட்டு வீரரை தேர்வு செய்யவில்லை. எனவே, ஹாஸல்வுட்டுக்கு பதிலாக பசல்ஹாக் பருக்கி சென்னை அணியில் மாற்று வெளிநாடு வீரராக தேர்வு செய்யப்பட்ட அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.