விளையாட்டு

சென்னை அணி ஜெயிக்காவிட்டாலும் பரவாயில்லை! ஆனால் இதை மட்டும் செய்யுங்கள்! ரசிகர்கள் வேண்டுகோள்.

Summary:

சென்னை அணி இந்த ஐபில் சீசனில் தொடர் தோல்விகளை சந்தித்துவரும் நிலையில் சென்னை அணி ரசிகர்கள் மிகவும் ஏமாற்றமடைந்துள்ளனர்.

சென்னை அணி இந்த ஐபில் சீசனில் தொடர் தோல்விகளை சந்தித்துவரும் நிலையில் சென்னை அணி ரசிகர்கள் மிகவும் ஏமாற்றமடைந்துள்ளனர்.

ஐபில் 13 வது சீசன் T20 போட்டிகள் தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்துவருகிறது. இதுவரை 25 போட்டிகள் முடிந்துள்ளநிலையில் டெல்லி அணி முதல் இடத்திலும், மும்பை அணி இரண்டாவது இடத்திலும் உள்ளது. ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சென்னை அணி தொடர் தோல்விகளால் வெறும் 4 புள்ளிகளுடன் இந்த பட்டியலில் 6 வது இடத்தில் உள்ளது.

இதுவரை 7 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணி இரண்டு போட்டிகளில் மட்டுமே வெற்றிபெற்றுள்ளது. இதுவரை ஒருமுறை கூட முதல் லீக் போட்டியில் இருந்து வெளியேறாத சென்னை அணி இந்த முறை அடுத்த லீக் சுற்றுக்கு முன்னேறுவது கடினம் என்ற சூழல் உருவாகியுள்ளது.

இனிவரும் அனைத்து போட்டிகளிக்கும் சென்னை அணி கட்டாயம் வெற்றிபெறவேண்டும் என்ற சூழல் உருவாகியுள்ளது. சென்னை அணி வெற்றி பெறுமா? அல்லது தோல்வியை சந்திக்குமா என்பதையும் தாண்டி, சென்னை அணி வீரர்களின் நடவடிக்கையே சென்னை அணி ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிங்கம் போல் வீரநடை போட்டு, எதிர் அணிகளை விரட்டி அடிக்கும் சென்னை அணி, இந்த ஐபில் சீசனில் மிகவும் மந்தமாக செயல்படுகிறது. சென்னை அணி பேட்டிங்கின்போது எந்த ஒரு வீரரின் முகத்திலும் சிரிப்பையோ அல்லது உற்சாகத்தையோ காண்பது என்பது மிகவும் கடினமாக உள்ளது.

ஏதோ கடமைக்கு விளையாடுவதுபோன்று, உற்சாகம் இல்லாமல் சென்னை அணி வீரர்கள் விளையாடிவருவது சென்னை அணி ரசிகர்களின் உற்சாகத்தையும் சேர்த்து குறைத்து வருகிறது. சென்னை அணி வீரர்களின் ஆட்டத்தை பார்க்கும் போது, இனி ஐபில் போட்டியே பார்க்கக்கூடாது என தோன்றுவதாகவும் பல ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.

எது எப்படி இருந்தாலும், வெற்றியோ? தோல்வியோ? தயவு செய்து இனி வரும் போட்டிகளில் பழைய உற்சாகத்துடன், தன்னம்பிக்கையுடன் விளையாடுங்கள் என்பதே தற்போதைய சென்னை அணி ரசிகர்களின் தலையாய கோரிக்கையாக உள்ளது.


Advertisement