#Breaking: அமரன் படத்தை பார்த்து கண்கலங்கி அழுத ரஜினிகாந்த்; காரணம் என்ன?.. அவரே சொன்ன தகவல்.!
சென்னை அணிக்கு திரும்பிய ஜாம்பவான்கள்! தாக்கு பிடிக்குமா கோலியின் பெங்களூரு அணி!
2019 ஐபிஎல் தொடரின் 39வது ஆட்டத்தில் இன்று பெங்களூரில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்துள்ளது.
சென்னை அணி இதுவரை ஆடியுள்ள 9 போட்டிகளில் 7 போட்டிகளில் வென்று உள்ளது. அதே நேரத்தில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி இதுவரை ஆடியுள்ள 9 ஆட்டங்களில் 7 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது. எனவே இந்த போட்டி பெங்களூரு அணிக்கு வென்றே ஆக வேண்டிய கட்டாய சூழ்நிலை உருவாகி உள்ளது.
சென்னை அணி ஆடிய கடந்த போட்டியில் சென்னை அணியின் சூப்பர் ஹீரோ தோனி முதுகுவலி காரணமாக ஆடவில்லை. இதனால் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றத்தில் இருந்தனர். அதற்கு ஏற்றார்போல் சென்னை அணியும் தோல்வியை தழுவியது. மேலும் கடந்த சில ஆட்டங்களில் சென்னை அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் பிராவோ இடம்பெறாமல் இருந்தார்.
இந்நிலையில் இன்று பெங்களூரு அணிக்கு எதிராக சென்னை அணியின் கேப்டன் தோனி மற்றும் நட்சத்திர வீரர் பிராவோ அணிக்கு திரும்பியுள்ளனர். இதனால் சென்னை அணி மீண்டும் தனது முழு பலத்துடன் களத்தில் இறங்குகிறது. ஏழு போட்டிகளை வென்று உள்ள இந்த பலம் வாய்ந்த சென்னை அணியை பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி தாக்குப்பிடிக்குமா என்பதை இன்னும் சற்று நேரத்தில் தெரிந்து கொள்ளலாம்.