சினிமா விளையாட்டு

தற்கொலைக்கு முயற்சித்த பிரபல இந்திய கிரிக்கெட் வீரர்! என்ன காரணம் தெரியுமா?

Summary:

Cricket player sreesanth tried to suicide due to match fixing

பிரபல தமிழ் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் மாபெரும் வெற்றிபெற்ற நிகழ்ச்சி பிக் பாஸ். தமிழில் மட்டும் இல்லாமல் மலையாளம், ஹிந்தி, தெலுங்கு என பல்வேறு மொழிகளில் பலவாறு பிரபலங்களை வைத்து ஒளிபரப்பாகி வருகிறது.

இந்நிலையில் ஹிந்தியில் கடந்த செப்டம்பர் மாதம் பிக் பாஸ் சீசன் 12 ஆரம்பமானது. இதில் இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான ஸ்ரீசாந்தும் கலந்துகொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் தனது சக போட்டியாளர்களிடம் பேசுகையில், சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளேன் என்று பலரும் கூறியபோது நான் மிகவும் மன அழுத்தத்திற்கு உல்லானேன். என்னால் இனி கிரிக்கெட் ஆடவே முடியாது என்று தற்கொலை முயற்சி கூட செய்தேன் என்று கண்ணீர் விட்டபடி பேசியுள்ளார். 


Advertisement