இந்தியா விளையாட்டு

வாவ்.. சூப்பர்! இரட்டிப்பு மகிழ்ச்சியில் தமிழக கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக்! ஏன்னு பார்த்தீர்களா! வைரலாகும் செம க்யூட் புகைப்படம்!!

Summary:

வாவ்.. சூப்பர்! இரட்டிப்பு மகிழ்ச்சியில் தமிழக கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக்! ஏன்னு பார்த்தீர்களா! வைரலாகும் செம க்யூட் புகைப்படம்!!

இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய வீரராக திகழ்ந்து வருபவர் தமிழகத்தை சேர்ந்த தினேஷ் கார்த்திக். இவர் பல்வேறு போட்டிகளில் இந்தியாவின் வெற்றிக்கு காரணமாக இருந்துள்ளார். மேலும் இவர் ஐபிஎல் போட்டிகளிலும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக தனது திறமையை நிரூபித்துள்ளார்.

ஆனால் இவருக்கு சில ஆண்டுகளாக சர்வதேச அளவிலான போட்டிகளில் வாய்ப்பு கிடைக்காமல் உள்ளார். மேலும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி முதல் பல சர்வதேச போட்டிகளில் அவர்  வர்ணனையாளராகவும் திகழ்ந்து வருகிறார். இந்த நிலையில் தினேஷ் கார்த்திக் தற்போது தனது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தினேஷ் கார்த்தி 2015-ல் பிரபல ஸ்குவாஷ் வீராங்கனை தீபிகாவைத் திருமணம்  செய்து கொண்டார். இந்த நிலையில் ஆறு ஆண்டுகளுக்கு பிறகு தற்போது அந்த தம்பதியினருக்கு இரட்டை ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த நிலையில் தினேஷ் தனது சமூக வலைத்தள பக்கத்தில், நாங்கள் மூவர் (அவரது செல்ல நாயுடன் சேர்த்து) தற்போது ஐவரானோம். மேலும் குழந்தைகளுக்கு கபீர் பல்லிகல் கார்த்திக், ஸியன் பல்லிகல் கார்த்திக் என்று பெயரிட்டுள்ளதாக கூறியுள்ளார். அந்த பதிவு வைரலான நிலையில் பலரும் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


Advertisement