கிரிக்கெட் வீரர் அஸ்வினின் தற்போதைய நிலை என்ன தெரியுமா? இதோ!

கிரிக்கெட் வீரர் அஸ்வினின் தற்போதைய நிலை என்ன தெரியுமா? இதோ!


Cricket player aswin current status

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரராக இருந்தவர் தமிழக வீரர் அஸ்வின். உள்ளூர் போட்டிகள், தமிழக அணிக்கான போட்டிகளில் விளையாடிவந்த அஸ்வின் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளராக தேர்வு செய்யப்பட்டு இந்திய அணியில் விளையாடிவந்தார்.

தனது சிறப்பான ஆட்டத்தால் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார் அஸ்வின். டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை விரைவாக எடுத்த இந்திய பவுலர் என்ற சிறப்பையும் பெற்றுள்ளார் அஸ்வின். மேலும், தோணி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடினார் அஸ்வின்.

TNPL 4

அதன்பின்னார் பஞ்சாப் அணிக்கு தேர்வு செய்யப்பட்டு தற்போதுவரை பஞ்சாப் அணியின் கேப்டனாக உள்ளார். எல்லாம் சிறப்பாக சென்றுகொண்டிருந்த நேரத்தில் அடுத்தடுத்த போட்டிகளில் சொதப்பலான ஆட்டம், புது வீரர்களின் வருகையால் இந்திய அணியில் இருந்து தூக்கி வீசப்பட்டார் அஸ்வின்.

இந்நிலையில் நாளை தொடங்க இருக்கும் தமிழ்நாடு அளவிலான தமிழ்நாடு பிரிமியர் லீக் போட்டியில் திண்டுக்கல் அணியின் கேப்டனாக களமிறங்கவுள்ளார் அஸ்வின். விஜய் சங்கர் தலைமையிலான சென்னை அணியுடனான ஆட்டத்தில் நாளை அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் அணி மோத உள்ளது.