இந்திய அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சினுக்கு கொரோனா பாதிப்பு.! வெளியான ஷாக் தகவல்.!

இந்திய அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சினுக்கு கொரோனா பாதிப்பு.! வெளியான ஷாக் தகவல்.!


corona-positive-to-sachin

நாடு முழுவதும் கொரோனா பரவல் ஓரளவுக்கு குறைந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் அசுர வேகம் எடுக்கத் தொடங்கியுள்ளது. இந்தியாவில் ஒரு நாளைக்கு 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர். மேலும் பல திரைப்பிரபலங்களும், அரசியல் தலைவர்களும், விளையாட்டு வீரர்களும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இந்தநிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சச்சின் டெண்டுல்கர் சமீபத்தில் நடந்த சாலை விழிப்புணர்வுக்கான ஓய்வு பெற்ற வீரர்களின் தொடரில் கலந்துகொண்டார். அந்த தொடர் முடிந்த சில தினங்களில் அவருக்கு லேசான அறிகுறிகள் தென்பட்டதால் அவர் பரிசோதனை செய்துகொண்டார். 

sachin

சச்சினுக்கு செய்த கொரோனா பரிசோதனையில், அவருக்கு பாஸிட்டிவ் என முடிவு வந்துள்ளது. ஆனால் அவரின் குடும்பத்தார் யாருக்கும் கொரோனா இல்லை என்றும் முடிவு வந்துள்ளது. இந்நிலையில் இப்போது சச்சின் வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.