இவர் மட்டும் இப்போ சி.எஸ்.கே டீம் க்கு வந்தா இனி யாராலும் சி.எஸ்.கே வ தோக்கடிக்க முடியாது – யார் அந்த வீரர் தெரியுமா?

இவர் மட்டும் இப்போ சி.எஸ்.கே டீம் க்கு வந்தா இனி யாராலும் சி.எஸ்.கே வ தோக்கடிக்க முடியாது – யார் அந்த வீரர் தெரியுமா?


Chrish lynn may transfer to csk in ipl 2020

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்துவரும் ஐபில் 13 வது சீசன் T20 போட்டிகள் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

முதல் சுற்று போட்டிகள் முடிந்து தற்போது அணிகளுக்கு இடையிலான இரண்டாவது சுற்று போட்டி தொடங்கிவிட்டது. முதல் சுற்றில் 7 போட்டிகளில் 2 போட்டிகளில் மட்டுமே வெற்றிபெற்ற சென்னை அணி இரண்டாவது சுற்றில் முதல் போட்டியில் வெற்றிபெற்றிருந்தாலும் இனிவரும் அனைத்து போட்டிகளிலும் வெற்றிபெற்றே ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளது.

ipl t20

மேலும், இதுவரை ஒருமுறை மூட முதல் லீக் போட்டியில் இருந்து வெளியேறாத சென்னை அணி இந்த முறை இரடாவது லீக் சுற்றுக்கு முன்னேறுமா என்ற சந்தேகமும் ரசிகர்கள் மத்தியில் உள்ளது. இதனிடையே சென்னை அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் தொடர்ந்து சொதப்பி வருவது ரசிகர்களிடையே மேலும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இந்த ஐபிஎல் தொடரில் மிட் சீசன் டிரான்ஸ்பர் எனப்படும் விதி முறையின் மூலமாக தொடரின் பாதியில் வீரர்களை மாற்றிக்கொள்ளும் முறை வரவுள்ளது. இதனை பயன்படுத்தி சென்னை அணி புதிய வீரரை அணிக்கு எடுக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

ipl t20

இந்த முறையை பயன்படுத்தி சென்னை அணி மும்பை அணியில் இருக்கும் கிறிஸ் லின்னை தேர்வு செய்து, சென்னை அணியின் தொடக்க வீரராக களமிறக்கலாம் என கூறப்படுகிறது. மும்பை அணியில் உள்ள கிறிஸ் லின் இதுவரை அந்த அணிக்காக விளையாடவில்லை. அவர் பெஞ்சில் இருப்பதால் அவரை சென்னை அணி எடுக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

கிறிஸ் லின் சென்னை அணிக்காக விளையாடும்பட்சத்தில் கிறிஸ் லின் மற்றும் வாட்சன் இருவரும் சிறப்பான ஓப்பனிங்கை கொடுத்தால், டுப்ளஸி, ராய்டு, ஜடேஜா, தோனி, சாம் கரண் என மிடில் ஆர்டர் சிறப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.