முதல் பந்திலையே தெறிக்கவிட்ட ரோஹித் சர்மா..! ஆரம்பத்திலையே ஆட்டம்காணும் சிஎஸ்கே.!Chennai vs Mumbai Indians first match updates

மும்பை மற்றும் சென்னை அணிகளுக்கு இடையே நடைபெறும் இன்றைய முதல் ஐபிஎல் போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பீல்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது.

இந்திய நேரப்படி அபுதாபியில் இன்று இரவு ஏழு முப்பது மணிக்கு தொடங்கிய முதல் ஐபிஎல் போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் விளையாடி வருகின்றன.

chennai super kings

போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து மும்பை இந்தியன்ஸ் அணி சார்பகா அதன் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் டிகாக் இருவரும் களம் இறங்கி விளையாடி வருகின்றனர். சென்னை அணி சார்பாக முதல் ஓவரை சாகர் வீசினார்.

நீண்ட நாட்களுக்கு பிறகு களமிறங்கியுள்ள ரோஹித் சர்மா எந்த ஒரு பதட்டமும் இல்லாமல் சாகர் வீசிய முதல் பந்தையே பவுண்டரிக்கு அனுப்பினார். இதன் மூலம் மும்பை அணி முதல் ஓவரிலேயே 12 ரன்கள் என்ற அபார இலக்குடன் தனது ஆட்டத்தை தொடங்கியுள்ளது.