ஐ.எஸ்.எல் கால்பந்து இறுதிப்போட்டியில் தோற்றதற்கு இதுதான் காரணம்! சென்னையின் எப்.சி. பயிற்சியாளர் என்ன கூறியுள்ளார்?

ஐ.எஸ்.எல் கால்பந்து இறுதிப்போட்டியில் தோற்றதற்கு இதுதான் காரணம்! சென்னையின் எப்.சி. பயிற்சியாளர் என்ன கூறியுள்ளார்?



chennai fc team coach talk about isl final match

ஐ.எஸ்.எல். கால்பந்து இறுதி ஆட்டத்தில் கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள தவறியதால் தோல்வி ஏற்பட்டதாக சென்னை அணியின் பயிற்சியாளர் ஓவென் கோய்லே கூறியுள்ளார்.

6-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் நேற்று முன்தினம் இரவு கோவா நேரு ஸ்டேடியத்தில் நடந்த இறுதி ஆட்டத்தில் அட்லெடிகோ டி கொல்கத்தா அணி 3-1 என்ற கோல் கணக்கில் முன்னாள் சாம்பியன் சென்னையின் எப்.சி.யை வீழ்த்தி 3-வது முறையாக கோப்பையை கைப்பற்றியது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சென்னை மற்றும் கொல்கத்தா அணிகள் மோதும் இறுதிப்போட்டி ரசிகர்கள் இல்லாமலே நடைபெற்றது. ஆட்டம் தொடங்கிய 10-வது நிமிடத்திலேயே கொல்கத்தா அணியின் ஜாவி ஹெர்னாண்டஸ் முதல் கோலை அடித்து அசத்தினார். ஆனால் சென்னை அணி மேற்கொண்ட அனைத்து கோல் முயற்சிகளும் தோல்வியிலேயே முடிந்தன.

இதனால் முதல்பாதி நேர ஆட்டம் முடிவடைந்த நிலையில், கொல்கத்தா அணி 1-0 என்கிற கணக்கில் முன்னிலை பெற்றிருந்தது. இதனையடுத்து 2-வது பாதி ஆட்டம் தொடங்கியதும் கொல்கத்தா அணியின் எடு கார்சியா, 48வது நிமிடத்தில்அந்த அணியின் இரண்டாவது கோலினை பதிவு செய்தார். தொடர்ந்து, ஆட்டத்தின் 69-வது நிமிடத்தில் சென்னையின் வீரர் வால்ஸ்கிஸ் முதல் கோலை பதிவு செய்தார்.

isl

ஆட்டம் விறுவிறுப்பாக சென்ற நிலையில், சென்னையின் கோல் அடிக்கும் முயற்சிகள் மீண்டும் தோல்வியிலேயே முடிந்தன. இதனையடுத்து கூடுதலாக வழங்கப்பட்ட 4 நிமிடங்களில் கொல்கத்தா அணியின் ஜாவி ஹெர்னாண்டஸ் மீண்டும் ஒரு கோலை அடித்து, ஆட்டநேர இறுதியில் 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று கொல்கத்தா அணி 3ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

தோல்விக்கு பிறகு சென்னை அணியின் பயிற்சியாளர் ஓவென் கோய்லே (ஸ்காட்லாந்து) செய்தியாளர்களிடம் பேசுகையில், ஆரம்பத்திலிருந்தே கோல் அடிக்க எங்களுக்கு தான் அதிக வாய்ப்புகள் கிடைத்தது. அதை கோலாக மாற்ற தவறினோம். பந்தை கிட்டத்தட்ட 70 சதவீதம் எங்களது கட்டுப்பாட்டில் வைத்திருந்தோம். 

சரியாக ஆகியிருந்தால் முதல் பாதியில் 5 கோல்கள் வரை நாங்கள் அடித்திருக்கலாம். கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள தவறி விட்டோம். வாய்ப்பை சாதகமாக உருவாக்கிக் கொள்ளாவிட்டால், அதற்குரிய விளைவை அனுபவிக்க வேண்டியதுதான். சிறப்பாக ஆடினார்கள் எங்கள் வீரர்கள், ஆனால் கோப்பையை வெல்ல முடியாமல் போனதால் அவர்களுக்காக வருந்துகிறேன் என தெரிவித்தார்.