சியாட் சர்வதேச கிரிக்கெட் விருதுகள் அறிவிப்பு: விருதுகளை தேடிச்சென்ற இந்திய வீரர்கள்!

சியாட் சர்வதேச கிரிக்கெட் விருதுகள் அறிவிப்பு: விருதுகளை தேடிச்சென்ற இந்திய வீரர்கள்!


CEAT Cricket Awards

உலகக் கோப்பை தொடர் தொடங்குவதற்கு முன்னர் சர்வதேச கிரிக்கெட் தொடர்களில் மிகச்சிறப்பாக செயல்புரிந்த பேட்ஸ்மேன், பவுலர், ஆல்ரவுண்டர் என வீரர்களை தேர்வு செய்து விருது வழங்கப்பட்டுள்ளது. 

அந்த வகையில் ஏற்கனவே 3 சர்வதேச விருதுகளை வென்ற இந்திய கேப்டன் விராட் கோலிக்கு மீண்டும், சியட் சர்வதேச கிரிக்கெட் விருதுகள் 2019ல் சர்வதேச சிறந்த வீரர் விருது, அங்கீகரிக்கப்பட்ட வீரர் விருது என இரண்டு விருதுகளை பெற்றுள்ளார்.

ceat awards

விருது பெறும் வீரர்களின் பட்டியல்:

வாழ்நாள் சாதனையாளர் விருது - மொஹீந்தர் அமர்நாத்
சர்வதேச கிரிக்கெட் மற்றும் ஆண்டின் சிறந்த பேட்ஸ்மேன் - விராட் கோலி 

இந்த ஆண்டின் சிறந்த சர்வதேச பவுலர்- ஜஸ்பிரிட் பும்ரா 

இந்த ஆண்டின் சிறந்த சர்வதேச டி 20 பேட்ஸ்மேன் - ஆரோன் பிஞ்ச் 

இந்த ஆண்டின் சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரர் - சதீஸ்வர் புஜாரா 

இந்த ஆண்டின் சிறந்த சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வீரர் - ரோஹித் சர்மா 

இந்த ஆண்டின் மிகச்சிறந்த செயல்திறன் மிக்க வீரர் - குல்தீப் யாதவ் 

மிகச்சிறந்த சர்வதேச டி 20 கிரிக்கெட் பவுலர்- ரஷித் கான் 

சர்வதேச சிறந்த பெண் கிரிக்கெட் வீராங்கனை - ஸ்மிரி மந்தானா 

சிறந்த இளம் கிரிக்கெட் வீரர் - யஷ்யாஷி ஜெய்ஸ்வால் (மும்பை)