விளையாட்டு

விறுவிறுப்பாக நடந்த குத்துச்சன்டை மேடையிலே சரிந்து விழுந்த பிரபல வீரர் மரணம்!

Summary:

boxer died in game


கடந்த சனிக்கிழமை அமெரிக்காவின் சிக்காக்கோவில் நடைபெற்ற 'லைட் மிடில் வெய்ட்'  குத்துச்சண்டை போட்டியில் சார்லஸ் கான்வேல் - பாட்ரிக் டே இருவரும் மோதினர். 10வது சுற்றில் பாட்ரிக் -ஐ சார்லஸ் கான்வேல் நாக் அவுட் செய்து வெற்றிப்பெற்றார்.

அப்போது மேடையிலே சரிந்து விழுந்த பாட்ரிக் டேவை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு கொண்டுசென்று அனுமதித்தனர். அவருக்கு மூளையில் பலத்த காயம் ஏற்பட்டு கோமா நிலைக்கு சென்றார். தீவிர சிகிச்சை பெற்றுவந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த பாட்ரிக் டே-வுக்கு பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவரது பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த தகவலறிந்து தான் மிகுந்த துயரமடைந்ததாக எதிர் போட்டியாளர் கான்வேல் தெரிவித்துள்ளார். குத்துசண்டை வீரர் பாட்ரிக் டே இறப்பிற்கு பல நாட்டில் உள்ள குத்துசண்டை வீரர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


Advertisement