முதல் T20: ஆட்டத்தின் துவக்கத்தில் நடந்த நெகிழ்ச்சியான சம்பவம்!

முதல் T20: ஆட்டத்தின் துவக்கத்தில் நடந்த நெகிழ்ச்சியான சம்பவம்!


Both teams kept silence for martyrs

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டி இன்று விசாகப்பட்டினத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இந்த போட்டியில் இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர் ஷிகர் தவானுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக கேஎல் ராகுல் களமிறங்குகிறார். மேலும் புவனேஷ்வர் குமாருக்கு ஓய்வளிக்கப்பட்டு உமேஷ் யாதவும் விஜய் சங்கருக்கு பதிலாக மயங் மார்க்கண்டேயனும் ஆடுகின்றனர்.

cricket

இன்றைய ஆட்டத்தின் துவக்கத்தில் வழக்கம்போல இரண்டு நாடுகளின் தேசிய கீதங்கள் இசைக்கப்பட்டன. அதன் பின்னர் இரண்டு நாட்டு வீரர்களும் கடந்த பிப்ரவரி 14 ஆம் தற்கொலைப்படை தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர். 

தீவிரவாத தாக்குதலுக்கு பிறகு இந்திய அணி ஆடும் முதல் கிரிக்கெட் போட்டி இதுவேயாகும். இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் வெறும் 126 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.