விளையாட்டு

தோனியின் இடத்தை பிடித்துக்கொண்ட ராகுல்.. ஏமாற்றத்தில் ரிஷப் பண்ட்!

Summary:

இந்திய அணியில் தோனியின் இடத்தை பிடித்துள்ள வீரர் யான் என்பது நேற்று பிசிசிஐ வெளியிட்ட அணி வீரர்கள் பட்டியலில் தெளிவாக தெரிகிறது.

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடவுள்ள இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்கள் தேர்வு நேற்று முடிந்தது. இந்த தேர்வில் மிகவும் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் தோனியின் இடத்தை பிடித்துள்ள நபர் யார்?

கடந்த ஆண்டு உலகக்கோப்பை தொடருக்கு பின் சர்வதேச போட்டிகளில் விளையாடாத தோனி ஐபிஎல் தொடருக்கு முன்னதாக தனது ஓய்வினை அறிவித்தார். அதன்பிறகு முதல்முறையாக இந்திய அணி சர்வதேச தொடர் ஒன்றில் இப்போது தான் பங்கேற்க உள்ளது.

தோனியின் ஓய்விற்கு பிறகு அவருக்கு பதிலாக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மனாக இந்திய அணியில் நிரந்தர இடத்தை பிடிக்கப்போவது யார் என்ற போட்டி நிலவியது. தினேஷ் கார்த்திக், ரிஷப் பண்ட், கேஎல் ராகுல் மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் இந்த பட்டியலில் இருந்தனர்.

உலகக்கோப்பை தொடரில் வாய்ப்பு வழங்கப்பட்டதால் ரிஷப் பண்ட் தோனிக்கு மாற்றாக இடம்பிடிப்பார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நேற்றை அணித் தேர்வு அமைந்துள்ளது.

ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் தொடர்களில் கேஎல் ராகுலின் பெயர் இடம்பெற்றுள்ளது. மேலும் ஒருநாள் மற்றும் டி20 தொடர்களுக்கு துணை கேப்டனாக ராகுல் அறிவிக்கப்பட்டுள்ளார். இதனால் தோனியின் இடத்தை கேஎல் ராகுல் நிரந்தரமாக கைப்பற்றிவிட்டார் என்பது போல் தோன்றுகிறது.


Advertisement