192 கோடி கொடுத்து தனது மனைவியை விவாகரத்து செய்யும் முன்னணி ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்..! - TamilSpark
TamilSpark Logo
விளையாட்டு

192 கோடி கொடுத்து தனது மனைவியை விவாகரத்து செய்யும் முன்னணி ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்..!

192 கோடி ரூபாயை மனைவிக்கு கொடுத்து அவரை பிரபல கிரிக்கெட் வீரர் விவாகரத்து செய்துள்ள சம்பவம் ஆஸ்திரேலியாவில் நடந்துள்ளது. ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்படணும், மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவருமான மைக்கேல் கிளார்க் தனது மனைவி கைலியை சட்டப்படி விவாகரத்து செய்துள்ளார்.

கடந்த 7 வருடங்களுக்கு முன்பு இருவரும் திருமணம் செய்துகொண்ட நிலையில் இவர்களுக்கு கெல்சி லீ என்ற 4 வயதுடைய மகள் இருக்கிறார். இந்நிலையில் கணவன் - மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் கடந்த 5 மாதங்களாக பிரிந்து வாழ்ந்துவந்துள்ளனர்.

இதனிடையே தங்கள் இருவரும் பரஸ்பர அடிப்படையில் பிரிந்துவிட்டதாக சமீபத்தில் அறிவித்துள்ளனர். மேலும், கிளார்க் சுமார் 192 கோடி ரூபாய் மனைவிக்கு கொடுத்து இருப்பதாக கூறப்படுகிறது. இருவரும் சிறிதுகாலம் சேர்ந்து வாழ்ந்த பிறகு பிரிந்து செல்ல இருப்பதாக தெரிவித்துள்ளனர்.


Advertisement


தொடர்புடைய செய்தி:


TamilSpark Logo