உலகம் விளையாட்டு

குரங்குனு சொல்லியே என் வாழ்க்கையை கெடுத்தது ஹர்பஜன் தான்!! சைமண்ட்ஸ் கண்ணீர்!

Summary:

Australian cricket player saimonds complaint against to harbajan singh

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் மீது குற்றம்சாட்டியுள்ளார். ஹர்பஜன் சிங் தன்னை குரங்கு என்று அழைத்ததற்கு பிறகு தான் தனது கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்ததாகவும் தான் குடிகாரனாக ஆனதற்கும் அதுதான் காரணம் என்றும் அவர் கூறியுள்ளார்.

பாண்டிங் தலைமையிலான கிரிக்கெட் அணி என்றாலே உலகில் உள்ள அதனை கிரிக்கெட் அணிகளுக்கும் சிம்ம சொப்பனம்தான். அணைத்து வீரர்களும் எதிரணியை தெறிக்கவிடுவார்கள். அவர்களில் மிகவு முக்கியமான வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ். 

2007-08ம் ஆண்டில் ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் செய்திருந்தது இந்திய அணி. அணியை தலைமை ஏற்று கேப்டனாக செயல்பட்டவர் கும்ப்ளே. ஆஸ்திரேலியா அணியுடன் விளையாண்ட டெஸ்ட் போட்டியின் தொடரை இழந்து இந்திய அணி.  அதற்கு முழு காரணம்  அந்த தொடரில் நடுவர்களின் தவறான முடிவுகளால் தான். அதில் சுமார் 10 தவறான தீர்ப்புகள் சைமன்ட்ஸுக்கு சாதமாக வழங்கப்பட்டவை. சைமண்ட்ஸுக்கு 10 முறை அவுட் வழங்கப்படவில்லை. 

 

இந்த விவகாரத்தை திசைதிருப்ப ஆஸ்திரேலியா அணி எடுத்த ஆயுதம்தான் சைமண்ட்ஸ். இந்திய வீரர் ஹர்பஜன் சிங் சைமண்ட்ஸை குரங்கு என்று அழைத்ததாக சர்ச்சையை ஏற்படுத்தினார். இந்த விவகாரம் பெரிதானத்தை அடுத்து சச்சின் தலைக்கேட்டதால் விவகாரம் சுமூகமாக முடிக்கப்பட்டது.


ஆனால் சைமண்ட்ஸை குரங்கு என்று அழைக்கவில்லை என்று ஹர்பஜன் சிங் மறுத்தார். அந்த பிரச்னை அத்துடன் முடிந்துவிட்டது. அதன்பிறகு குடி மற்றும் ஒழுங்கீன செயல்பாடுகளின் காரணமாக சைமண்ட்ஸ் அணியிலிருந்து தூக்கி எறியப்பட்டார். அதன்பிறகு ஐபிஎல்லில் ஹர்பஜன் சிங்குடன் இணைந்து ஆடியுள்ள சைமண்ட்ஸ் மீண்டும் தற்போது அந்த விவகாரத்தை கிளப்பியுள்ளார். 

ஹர்பஜன் சிங் தன்னை அந்த ஒருமுறை மட்டும் குரங்கு என்று கூறியதில்லை. இந்தியாவில் ஆடியபோதும் ஒன்றிரண்டு முறை அதேபோல் என்னை குரங்கு என்று அழைத்துள்ளார். அவர் என்னை குரங்கு என்று அழைத்ததன் பிறகு எனது கிரிக்கெட் வாழ்க்கையே முடிவுக்கு வந்தது. அதிகமாக குடிக்க ஆரம்பித்தேன். அதனால் குடும்ப வாழ்க்கையிலும் பிரச்னை வந்தது. நான் அதிகமாக குடித்ததற்கு ஹர்பஜன் சிங் தன்னை குரங்கு என்று அழைத்ததுதான் காரணம் என்பதாக கூறியுள்ளார். சைமண்ட்ஸ்.


Advertisement