23 வருடங்களுக்கு பிறகு மீண்டும் சாதனை படைத்த ஆஸ்திரேலிய அணி! என்ன சாதனை தெரியுமா?



australia-new-record-against-to-pakistan-after-23-years

உலக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் கடந்த மே 30 தொடங்கி விறுவிறுப்பாக நடந்துவருகிறது. மூன்று போட்டிகளில் வெற்றிபெற்று 6 புள்ளிகளுடன் நியூசிலாந்து அணி முதல் இடத்திலும், 6 புள்ளிகளுடன் ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இடத்திலும் உள்ளது.

நேற்று நடந்த ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் இடையேயான போட்டியில் ஆத்ரேலியா அணி கடைசி நேரத்தில் வெற்றிபெற்றது. நேற்றைய போட்டியில் ஆஸ்திரேலிய அணி வீரர் வார்னர் 111 பந்தில் 11 பவுண்டரி, 1 சிக்சர் என 107 ரன்கள் எடுத்து அவுட்டானார். பின் வரிசை வீரர்கள் சொதப்ப , ஆஸ்திரேலிய அணி 49 ஓவரில் 307 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

World cup 2019

இந்நிலையில் நேற்றைய போட்டியில் முதல் விக்கெட்டுக்கு ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பின்ச், வார்னர் இருவரும் ஜோடி சேர்ந்து முதல் விக்கெட்டுக்கு, 146 ரன்கள் எடுத்தனர். சுமார் 23 வருடங்களுக்கு பிறகு ஆஸ்திரேலிய அணி வீரர்கள் பாக்கிஸ்த்தானுக்கு எதிராக முதல் விக்கெட்டுக்கு 100 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளனர்.