பிரபல இந்திய கிரிக்கெட் வீரரை கைதுசெய்ய நீதி மன்றம் உத்தரவு!

பிரபல இந்திய கிரிக்கெட் வீரரை கைதுசெய்ய நீதி மன்றம் உத்தரவு!



Arrest warrant against to cricket player gautham gambhir

இந்திய அணியின் தொடக்க மற்றும் அதிரடி ஆட்டக்காரராக இருந்தவர் கவுதம் காம்பிர். கடந்தமுறை இந்தியா உலகக்கோப்பை வாங்க கவுதம் காம்பிரும் ஒரு முக்கிய காரணம். ஆனால் சில காலமாக இவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதால் அனைத்துவிதமான போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாகா அறிவித்தார் காம்பிர்.

இந்நிலையில் வீடுகட்டி தருவதாக பணம் பெற்றுவிட்டு, தற்போதுவரை வீடு கட்டி தரவில்லை என்ற குற்றத்திற்காக கம்பீருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது டெல்லி நீதிமன்றம்.  டெல்லியின் காஜியாபாத் பகுதியில் கடந்த 2011ஆம் ஆண்டு ருத்ரா குரூப் என்ற நிறுவனத்திற்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் 17 வீடுகளை வாங்க ரூ.1.98 கோடி ரூபாயை 17 பேர் முன்பணமாக செலுத்தியுள்ளனர்.

Gautham kambir

ஆனால், சொன்னது போல வீடு கட்டி தரபடாததால் பாதிக்கப்பட்ட 17 பேரும் டெல்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்நிலையில் இந்த கட்டிட நிறுவனத்தின் விளம்பர தூதரக நடித்த கம்பீர் மீதும் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு சம்மந்தமாக காம்பிற்கு பலமுறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகாததால் அவருக்கு 10000 ரூபாய் பிணையுடன் வெளிவரக் கூடிய வாரண்ட் பிறப்பித்தது. இந்த சம்பவம் கம்பீர் ரசிகர்களிடேயே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.