விளையாட்டு

சிஎஸ்கேவுக்கு இணையான ரசிகர் கூட்டத்தை வைத்திருக்கும் மற்றொரு அணி.! என்ன காரணம்?

Summary:

சிஎஸ்கேவுக்கு இணையான ரசிகர் கூட்டத்தை வைத்திருக்கும் அணி என்றால் அது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிதான்.

ஐபில் 13 வது சீசன் T20 போட்டிகள் தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்துவருகிறது. இந்திய அளவில் அதிக ரசிகர்களை கொண்டுள்ள அணி என்றால் அது சிஎஸ்கே தான். ஆனால் இந்தமுறை சிஎஸ்கே அணி, ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றத்தை கொடுத்து வருகின்றனர். தற்போது சிஎஸ்கேவுக்கு இணையான ரசிகர் கூட்டத்தை வைத்திருக்கும் அணி என்றால் அது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிதான். அதற்கு காரணம் விராட் கோலி, ஏபி டிவில்லியர்ஸ் தான்.

இந்திய அணியில் எப்படி தோனி - விராட் கோலி கூட்டணியோ அதே போல் தான் பெங்களூரு அணிக்கு அமைந்த கூட்டணி விராட் கோலி - ஏபி டிவில்லியர்ஸ். கொல்கத்தா - பெங்களூரு அணிக்கு இடையே நடைபெற்ற நேற்றைய போட்டியில் இருவரும் சேர்ந்து, 3000 பார்டர்னன்ஷிப் ரன்களைக் கடந்து, சாதனை படைத்துள்ளனர்.

பெரும்பாலான ரசிகர்கள் இதுவரை கப் அடிக்காமல் இருக்கும் பெங்களூரு அணி தான் 2020 சாம்பியன் ஆகவேண்டும் என எதிர்பார்க்கின்றனர். அதற்கும் முக்கிய காரணம் விராட் கோலி - ஏபி டிவில்லியர்ஸ் தான். இந்த அணி இதுவரை நடைபெற்ற 7 போட்டிகளில் விளையாடி 5 போட்டிகளில் வெற்றிபெற்று 10 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. இதுவரை நடந்த ஐபிஎல் சீசன்களை போல இல்லாமல், இந்த வருடம், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி சிறப்பாக ஆடி வருகிறது. எனவே எப்படியாவது RCB அணி இந்தவருடம் கப் அடிக்க வேண்டும் என ஆவலுடன் காத்திருக்கின்றனர்.


Advertisement