அந்தமானில் கச்சேரி.. இன்ப சுற்றுலா சென்ற அய்யனார் துணை நடிகர்கள்.. வைரலாகும் வீடியோ.!
அடக்கடவுளே.. 9 வயது சிறுமி தலையில் பலாப்பழம் விழுந்து உயிரிழப்பு.. இப்படியும் மரணம்..!!
பலாப்பழம் விழுந்து பரிதாபமாக 9 வயது சிறுமி பலியான சோகம் நிகழ்ந்துள்ளது.
கேரள மாநிலத்தில் உள்ள மலப்புரம் பகுதியைச் சார்ந்த சிறுமி ஆயிஷா. இவரின் வீட்டில் பலாமரம் ஒன்று இருக்கிறது. வீட்டின் முற்றத்தில் சம்பவத்தன்று சிறுமி ஆயிஷா விளையாடிக் கொண்டிருந்த நிலையில், பெரிய அளவிலான பலாப்பழம் திடீரென அவரது தலையில் விழுந்தது.
சிறுமி உயிரிழப்பு
இதனால் சிறுமி அங்கேயே மயக்கம் அடைந்த நிலையில், பதறிப்போன அவரது பெற்றோர் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்தனர். மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டபோதிலும் சிறுமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையும் படிங்க: பெட் கட்டி மொடாக்குடி; குழந்தை பிறந்த 8 நாட்களில் எமலோகத்திற்கு டிக்கெட்.!!

போலீஸ் விசாரணை
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், காவல்துறையினர் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இது கோடை விடுமுறை என்பதால் அவ்வப்போது நமது குழந்தைகள் என்ன செய்கிறார்கள்? என கண்காணித்துக்கொண்டே இருக்க வேண்டுமெனவும் அறிவுறுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க: "ம்ம்மா... எரியுதுமா விட்டுடு..." எரித்து கொல்லப்பட்ட குழந்தைகள்.!! தாய் தற்கொலை.!!