உலகின் கால்பந்து சரித்திர நாயகன் திடீர் மரணம்.! அவரது மறைவிற்கு 2 நாள் துக்கம் அனுசரிக்கப்படும்.! கேரள அரசு

உலகின் கால்பந்து சரித்திர நாயகன் திடீர் மரணம்.! அவரது மறைவிற்கு 2 நாள் துக்கம் அனுசரிக்கப்படும்.! கேரள அரசு


2-days-mourning-for-maradonas-death

அர்ஜென்டினா கால்பந்து ஜாம்பவான் மரடோனா மாரடைப்பால் நேற்று மரணம் அடைந்தார். பிரபல கால்பந்தாட்டவீரர் மரடோனாவிற்கு உலக அளவில் ரசிகர்கள் உள்ளனர். அவரது மரணத்தால் கால்பந்து ரசிகர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர். 

மரடோனாவின் மரணத்திற்கு உலகம் முழுபவதும் உள்ள கால்பந்து ரசிகர்கள் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். அர்ஜென்டினா கால்பந்து அணியின் முன்னாள் கேப்டனும், ஜாம்பவானுமான மரடோனா 1977முதல் 1994-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் சர்வதேச கால்பந்து போட்டியில் உலகத்தையே திரும்பி பார்க்கவைத்தவர்.

1986-ம் ஆண்டு உலக கோப்பையை வென்ற அர்ஜென்டினா அணியின் கேப்டனாக இருந்த மரடோனா கோப்பையை வென்றதற்கு முக்கிய காரணமாக இருந்தார். அவரது மறைவையொட்டி அர்ஜென்டினாவில் 3 நாட்கள் தேசிய துக்கம் கடைப்பிடிக்கப்படும் என்று அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது.

marodana

இந்நிலையில், அர்ஜென்டினா கால்பந்து வீரர் மரடோனா காலமான நிலையில், அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக கேரள அரசு இரண்டு நாள் துக்கம் அனுசரிப்பதாக அறிவித்துள்ளது. இதுகுறித்து அறிவிப்பை வெளியிட்ட கேரள விளையாட்டுத் துறை மந்திரி ஜெயராஜன், 

மரடோனாவின் மறைவு உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவிலும், லட்சக்கணக்கான ரசிகர்கள் அவர் மறைவை நம்ப முடியாத நிலையில் உள்ளனர். இந்தச் சூழ்நிலையில், இன்று முதல் இரண்டு நாள் துக்கத்தை அனுசரிக்க மாநில விளையாட்டுத் துறை முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.