சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை தற்கொலை! அதிர்ச்சியில் ரசிகர்கள்...!
அவள் கணவர் வெளிநாட்டில் இருந்தபோது...கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட பெண்!! இளைஞர் அளித்த பகீர் வாக்குமூலம்!!
தூத்துக்குடியில் வசித்து வந்தவர்கள் நரேஷ்-மகாராணி தம்பதியினர். இவர்களுக்கு விம்ரித் என்ற 5 வயது மகன் உள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மகாராணி வீட்டில் தனியாக இருந்த போது மர்ம நபர்களால் கொடூரமாக கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார். இந்நிலையில் வெளியே சென்று விட்டு வீடு திரும்பிய கணவர் நடேஷ் இதனை கண்டு பெரும் அதிர்ச்சியடைந்தார். பின்னர் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
மேலும் இந்த கொலை குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் இளவரசன் என்ற 25 வயது நபர் தான்தான் கொலை செய்ததாக போலீசாரிடம் சரண் அடைந்துள்ளார். இதனை தொடர்ந்து தற்பொழுது இளவரசன் பரபரப்பு வாக்குமூலம் ஒன்றை அளித்துள்ளார்.

அதில் மகாராணியின் கணவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் எனக்கும் மகாராணிக்கும் நான்கு ஆண்டுகளாக பழக்கம் இருந்தது. அவரது மகனை பள்ளிக்கு அழைத்து செல்வது, பள்ளியில் இருந்து அழைத்து வருவது மேலும் அவரது வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி தருவது போன்ற எல்லா உதவிகளையும் நான்தான் செய்து வந்தேன். மேலும் இருவரும் பலமுறை தனிமையில் மகிழ்ச்சியாக இருந்துள்ளோம்.
இந்நிலையில் மகாராணியின் கணவர் வெளிநாட்டில் இருந்து ஊர் திரும்பிய நிலையில், அவர். என்னிடம் பேசுவதை குறைத்து கொண்டார் மேலும் நாம் இருவரும் திருமணம் செய்து கொண்டுவேறு ஊருக்குச் சென்று விடலாம் என்று கூறிய போதும், நான் தயார் ஆனால் தற்போது வேண்டாம் என காலம்தாழ்த்தி வந்துள்ளார்.

இந்நிலையில் அவரது வீட்டிற்கு சென்ற நான் திருமணம் செய்து கொள்வோம் இல்லையெனில் தற்கொலை செய்து கொள்வோம் என கூறியுள்ளார். ஆனால் மகாராணி தற்போது திருமணம் செய்து கொள்ள முடியாது என மறுப்பு தெரிவித்துள்ளார்.
உடனே நான் எனது கையை பிளேடால் அறுத்துக்கொண்டு, அவரது கையையும் அறுத்தேன். ஆனால் அவர் தடுத்து கூச்சலிட்ட நிலையில் ஆத்திரமடைந்த நான் அவரது கழுத்தில் பலமுறை அறுத்தேன். இதில் இரத்தம் அதிகளவில் வெளியேறி அவர் துடித்துக் கொண்டிருந்தநிலையில் அங்கிருந்து வெளியேறி விட்டேன். பின்னர் போலீசாருக்கு பயந்து நானே சரணடைந்து விட்டேன் என கூறியுள்ளார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.