ஏற்கனவே 3 குழந்தைகள் .. திருமணமான பெண் கள்ளக்காதலனுடன் மாயம்..!! போலிசாரின் பிடியில் சிக்கியது எப்படி..?

ஏற்கனவே 3 குழந்தைகள் .. திருமணமான பெண் கள்ளக்காதலனுடன் மாயம்..!! போலிசாரின் பிடியில் சிக்கியது எப்படி..?


httpswwwdailythanthicomnechildren-the-woman-who-left-he

கணவன் மற்றும் தனது 2 குழந்தைகளை விட்டு, கள்ளக்காதலனுடன் மனைவி சென்ற சம்பவம் புத்தூர் பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் வசந்தாநகர் பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் கர்நாடக மாநிலம் புத்தூர் அருகே ஒர்க் ஷாப்பில் வேலை செய்து வந்துள்ளார். இவர் வேலை பார்க்கும் அதே பகுதியில் 26 வயதுள்ள ஒரு பெண்ணிடம் பழக்கம் ஏற்பட்டு தினமும் செல்போனில் உரையாடி வந்துள்ளார். இவர்களின் எல்லையில்லா உரையாடல் காதலாக மாறியது. இந்த பெண்ணிற்க்கு ஏற்கனவே 3 குழந்தைகள் மற்றும் கணவன் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், கள்ளக்காதலர்கள் இருவரும் 19 ஆம் தேதியன்று  வீட்டை விட்டு வெளியேறினர். பின்னர், வெளியில் சென்று விட்டு வீடு திரும்பிய கணவருக்கு அதிர்ச்சி காத்திருத்தது. அங்கு, 3 வயது குழந்தை மற்றும் மனைவியை காணவில்லை என்று பதறிய கணவர், அக்கம் பக்கத்தினரிடம் விசாரித்தும், தேடியும் வந்துள்ளார். பிறகு புத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலிஸார் அக்கம்பக்கதினரிடம் விசாரணை நடத்திய போது, மனைவி புத்தூர் பகுதியில் ஒர்க் ஷாப்பில் வேலை பார்த்த நபருடன் சென்றது தெரிய வந்தது.

இதனையடுத்து, போலிஸார் அந்த நபரின் தொடர்பு எண்ணை தொடர்ந்து கண்காணித்து வந்த நிலையில், இருவரும் திருப்பூரில் தங்கியிருப்பது தெரியவந்தது. பின்னர், போலிஸார் திருப்பூருக்கு விரைந்துச் சென்று, அவர்கள் இருக்கும் இடத்தை கண்டறிந்து, மனைவியை கணவனிடம் ஒப்படைத்து, அந்த நபரை கர்நாடக மாநிலத்திற்க்கு அழைத்துச் சென்று மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.