இளைஞரை படுக்கைக்கு வற்புறுத்திய இளம்பெண், இறுதியில் நேர்ந்த விபரீதம்.!



girl give sex torture to boy

 திருமணமாக ஆண் ஒருவரை இளம்பெண் ஒருவர் தொடர்ந்து  படுக்கைக்கு அழைத்து  பாலியல் தொல்லை கொடுத்து வந்ததால் மனமுடைந்த ஆண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

மும்பை பர்பானி மாவட்டத்தில் வசித்து வருபவர் சச்சின் மித்காரி. 38  வயது நிரம்பிய  இவர் மருத்துவமனை ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் மித்காரியுடன் மருத்துவமனையில் ஒன்றாக பணிபுரிந்து வரும் இளம்பெண் ஒருவர், மித்காரிக்கு தினமும் ஆபாசமாக பேசி படுக்கைக்கு அழைத்து பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். அதுமட்டுமின்றி நான் சொல்வதை கேட்காமல் என் ஆசைக்கு இணங்க மறுத்தால், நீ என்னை கற்பழிக்க முயன்றாய் என உன்மேல் போலீசாரிடம் புகார் கொடுப்பேன் எனவும் மிரட்டியுள்ளார்.

இது தினமும் தொடரவே மனமுடைந்த மித்காரி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இதுகுறித்து  தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து மித்காரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த அந்த பெண் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.