நடிகர் மனோஜின் மனைவியும் ஹீரோயினா?? அவரோட அழகான குடும்பத்தை பார்த்தீங்களா!!
அட கருமமே இதற்காகத்தானா.. இறந்துவிட்டதாக கூறி இளம்பெண் நடத்திய பலே நாடகம், வெளிவந்த மட்டமான ரகசியங்கள்.!

உத்தரப்பிரதேசத்தில் வேறு நபருடன் தகாத உறவு கொண்டு அவனுடன் வாழ, தன் கணவரை போலீசாரிடம் சிக்க வைக்கவ மனைவி செய்த செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரப் பிரதேசத்தில் கடந்த 2016 ஆம் ராகுல் என்பவர் ரூபி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார் .இந்நிலையில் சமீபத்தில் ரூபியின் தந்தை ஹரி பிரசாத் தனது மகள் ரூபியை வரதட்சணைக் கேட்டு ராகுலும் அவரது பெற்றோரும் கொடுமை செய்து,கொலை செய்ததுவிட்டதாக புகார் அளித்துள்ளார்.
இது குறித்து போலீசார் ராகுல் மாறும் அவரது குடும்பத்தினர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர் .
இந்நிலையில் ரூபியின் பேஸ்புக் ஆக்டிவாக இருப்பதாலும்,ரூபியின் சடலம் கிடைக்காததாலும் போலீசாருக்குரூபி இறக்கவில்லை என சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
பின்னர் ரூபியின் போன் நம்பரை பின்பற்றி கண்காணித்தபோது அவர் உயிரோடு இருப்பதும் ராமு என்பவருடன் வாழ்ந்து வருவதும் தெரியவந்தது.
இதையடுத்து ராமுவுடன் வாழ்வதற்காகவும், தன் கணவரையும் ,அவரது குடும்பத்தாரையும் போலீசில் சிக்க வைப்பதற்காகவும் இறந்ததாக நாடகமாடிய ரூபியையும், அவருக்குத் துணையாக இருந்த ராமுவையும் போலீசார் கைது செய்தனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .