தன்னுடைய பதவிக்கு ஆபத்து வரும்போதெல்லாம் ஓ.பி.எஸ் துரோரக யுத்தம் நடத்துவார்!.. ஆர்.பி.உதயகுமார் அதிரடி..!.

தன்னுடைய பதவிக்கு ஆபத்து வரும்போதெல்லாம் ஓ.பி.எஸ் துரோரக யுத்தம் நடத்துவார்!.. ஆர்.பி.உதயகுமார் அதிரடி..!.


Whenever his position is threatened, the OPS will wage treacherous war

தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் பகுதியில் அ.தி.மு.க 50 வது ஆண்டு பொன்விழா மற்றும் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூவின் பிறந்தநாள் விழா நடைபெற்றது.

இந்த விழாவில் பங்கேற்ற அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விழாவில் பேசியதாவது, தனக்கு எப்போதெல்லாம் பதவி கிடைக்கவில்லையோ அப்போதெல்லாம் ஓ.பன்னீர்செல்வம் தர்மயுத்தம் தொடங்குவார். ஆனால் அது தர்மயுத்தம் இல்லை. அது துரோக யுத்தம். அவரது யுத்தங்கள் எப்போதும் தோல்வியில் தான் முடிந்துள்ளன.

ஓ.பி.எஸ், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு இதுவரை 7 முறை தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றியுள்ளார். அவர் அதிமுகவுக்கு துரோகம் செய்த காரணத்தினால் கட்சி ஒழுங்கு நடவடிக்கைக்கு அவர் ஆளாகியுள்ளார். தன்னுடைய பதவிக்கு ஆபத்து வரும்போதெல்லாம், கட்சிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக ஒரு மாயத்தோற்றத்தை உருவாக்குவார். அதற்காக அவர் போராடுவார். அதற்காக அவர் பல தர்மயுத்தங்களை நடத்துவார். அந்த யுத்தங்கள் எல்லாம் அவருக்கு தோல்வியில் தான் முடிந்திருக்கின்றன தவிர அவருக்கு வெற்றியைத் தராது என்று பேசியுள்ளார்.