அரசியல் தலைவர்களை ED, NIA ஏவி அச்சுறுத்தும் பாஜக; தொல். திருமாவளவன் கடும் கண்டனம்.!

அரசியல் தலைவர்களை ED, NIA ஏவி அச்சுறுத்தும் பாஜக; தொல். திருமாவளவன் கடும் கண்டனம்.!


VCK Thirumavalavan about BJP 

 

கடந்த சில நாட்களுக்கு முன்பு தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தமிழ்நாட்டில் உள்ள 9 மாவட்டங்களில் 24 இடங்களில் அதிரடி சோதனை நடைபெற்றது. 

மறைந்த பாமக பிரமுகர் திருபுவனம் ராமலிங்கத்தின் கொலை வழக்கு தொடர்பாக, எஸ்.டி.பி.ஐ கட்சியை சேர்ந்த நபர்களின் அலுவலகம், வீடுகளில் சோதனை நடைபெற்றது. 

thirumavalavan

இந்நிலையில், இந்த விசயத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள விசிக தலைவர் தொல். திருமாவளவன், தமிழகத்தில் காலூன்ற நினைக்கும் டெல்லி பாஜக, முன்னதாக ED-ஐ ஏவி வந்தது. தற்போது NIA-வை ஏவி வருகிறது. அரசியல் தலைவர்களை பாஜக அச்சுறுத்தி வருகிறது. இவை கண்டிக்கத்தக்கது" என பேசினார்.