அதிமுகவை ஓவர்டேக் செய்ய ஓயாது உழைக்கும் பாஜக? - வி.சி.க தொல். திருமாவளவன் பரபரப்பு பேட்டி.!

அதிமுகவை ஓவர்டேக் செய்ய ஓயாது உழைக்கும் பாஜக? - வி.சி.க தொல். திருமாவளவன் பரபரப்பு பேட்டி.!



VCK Thirumalavan MP Pressmeet at Erode

 

திமுக கூட்டணி வலுவாக உள்ளது. அதிமுக கூட்டணி தேர்தலுக்கு பின்னர் கலைந்துவிட்டது. அதிமுகவை பின்னுக்கு தள்ளி பாஜக தமிழகத்தின் இரண்டாவது பிரதான கட்சியாக உருவெடுக்க முயற்சிக்கிறது என வி.சி.க தலைவர் குற்றசாட்டை முன்வைத்தார்.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள டி.என் பாளையம், கள்ளிப்பட்டியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடியை ஏற்றிவைத்த அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார். 

Vck

அப்போது, அவர் பேசுகையில், "ஐ.நா சபை மற்றும் சர்வதேச சமூகம் ஈழத்தமிழர்களின் துயரை துடைக்க முன்வர கோரிக்கை வைக்கிறேன். முள்ளிவாய்க்கால் படுகொலையில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தர வேண்டும். 

தமிழ்நாட்டில் அதிமுகவை பின்னுக்குத்தள்ளிவிட்டு பாஜக இரண்டாம் இடத்திற்கு வருவதற்காக பகிரங்க முயற்சி செய்து வருகிறது. தமிழ்நாடு எப்போதும் சமூகநீதிக்கான மண். இம்மண்ணில் சனாதனத்திற்கு இடம் என்பது இல்லை. 

Vck

கடந்த நாடாளுமன்ற தேர்தல் & சட்டப்பேரவை தேர்தல் என திமுக தலைமையிலான கூட்டணி வலுப்பட இருக்கிறது. அதிமுகவின் தலைமையில் கூட்டணி கட்சிகள் என்பது இல்லை. அவர்கள் தேர்தலுடன் கலைந்து சிதறிவிட்டார்கள். 

பாஜகவின் ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற கொள்கையானது ஏற்புடையது கிடையாது. அது அரசியல் அமைப்பு சட்டத்திற்கே எதிரானது ஆகும். ஜனநாயத்திற்கும் அது விரோதமானது, எதிரானது" என்று தெரிவித்தார்.