அரசியல் தமிழகம் Covid-19

வசந்த் & கோ உரிமையாளரும், காங்கிரஸ் எம்பியுமான வசந்தகுமாருக்கு கொரோனா!

Summary:

vasanth & co and mp vasanthakumar affected by corona

கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. தமிழகத்திலும்,கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை மற்றும் கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 

இந்தநிலையில் ஆரம்பத்திலிருந்து அரசு, தன்னார்வலர்கள், அரசியல் கட்சியினர் ,என பல்வேறு தரப்பில் களத்தில் இறங்கி உதவி செய்து வருகின்றனர். இந்தநிலையில், களத்தில் பணியாற்றும் நபர்களுக்கு கொரோனா உறுதியாகி வந்தது. கொரோனா தடுப்பு மற்றும் நிவாரண பணிகளில் ஈடுபட்டுள்ள எம்எல்ஏக்கள் மற்றும் அமைச்சர்கள் கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

கொரோனா பாதிப்பு காரணமாக எம்.பி வசந்தகுமார், பல்வேறு பகுதிகளில் நிவாரண பொருட்கள் வழங்கி வந்தார். இதற்கிடையே அவரது உதவியாளர் ஒருவருக்கு, கொரோனா தொற்று ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து வசந்தகுமாருக்கும், அவரது மனைவி தமிழ்செல்விக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் இருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.  

காங்கிரஸ் எம்.பி வசந்தகுமாருக்கு வெண்டிலேட்டர் மூலம் சுவாசம் நடைபெறுவதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். மேலும் மக்களவை உறுப்பினர் வசந்தகுமார் விரைவில் மீண்டு வர வேண்டும் என கே எஸ் அழகிரி தெரிவித்துள்ளார்.


Advertisement