நடிகர் சிவகார்த்திகேயன் சென்ற கார் விபத்து! சென்னையில் பரபரப்பு!
ஜெயலலிதா பாணியை கையில் எடுத்த விஜய்! 3 மணி நேரமாக விஜய்யுடன் ரகசிய பேச்சுவார்த்தை நடத்திய செங்கோட்டையன்! புஸ்ஸி ஆனந்த் புறக்கணிப்பு..... தவெக-வில் நடக்கும் அரசியல் யூகம்!
தமிழக அரசியல் களத்தில் அடுத்த கட்ட நகர்வுகளைத் தீர்மானிக்கும் வகையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மேற்கொண்ட சமீபத்திய ஆலோசனைச் சந்திப்பு அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக, வரும் தேர்தலை முன்னிட்டு கட்சியின் செயல்திட்டங்கள் குறித்து தீவிரமாக பேசப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முக்கிய ஆலோசனை சந்திப்பு
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், கட்சியின் நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் கே.ஏ. செங்கோட்டையனுடன் நேற்று (டிசம்பர் 20) சுமார் மூன்று மணி நேரம் தீவிர ஆலோசனை மேற்கொண்டதாக கூறப்படுகிறது. சென்னை பட்டினம்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில், கட்சியின் அடுத்த கட்ட பிரச்சாரப் பயணம் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
தேர்தல் திட்டங்கள் மற்றும் பிரச்சாரம்
234 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வேட்பாளர் தேர்வு, தேர்தல் கூட்டணி அமைப்பதற்கான பேச்சுவார்த்தைக் குழுக்கள் உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் இந்தச் சந்திப்பில் இடம் பெற்றதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஈரோடு மக்கள் சந்திப்புப் பயணத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அடுத்த கட்ட மாவட்டச் சுற்றுப்பயணங்களை ஜெயலலிதா பாணியில் திட்டமிடுமாறு செங்கோட்டையனிடம் விஜய் கேட்டுக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: 2026 தேர்தலில் அதிமுக- தவெக கூட்டணி..? அப்படியே அந்தர் பல்டி அடித்து சூசகமான பதிலால் புயலை கிளப்பிவிட்ட செங்கோட்டையன்! அதிரும் அரசியல் களம்!
அரசியல் வட்டாரங்களில் எழும் யூகங்கள்
இந்தச் சந்திப்பில் கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பங்கேற்காதது அரசியல் வட்டாரங்களில் பல்வேறு அரசியல் யூகங்களை கிளப்பியுள்ளது. இருப்பினும், நிர்வாகத் திறன் மற்றும் கூட்டணி பேச்சுவார்த்தைகளில் 50 ஆண்டுகால அனுபவம் கொண்ட செங்கோட்டையனுக்கே விஜய் முன்னுரிமை அளித்து வருவதாக தவெக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வரும் ஜனவரி மாதத்திற்குள் கூட்டணி குறித்த முதற்கட்ட முடிவுகளை எட்ட கட்சி தலைமை திட்டமிட்டுள்ள நிலையில், செங்கோட்டையன் தலைமையிலான குழுவின் செயல்பாடுகள் தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் வெற்றி வாய்ப்புகளை தீர்மானிக்கும் முக்கியக் காரணியாக அமையும் என அரசியல் பார்வையாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இதையும் படிங்க: போடு வெடிய... தவெக தலைவர் விஜய் கட்சியின் சின்னம் இதுதான்...! லீக்கானது ரகசிய சின்னம்!