இப்படி ஆகி போச்சே...! இரண்டாக உடைந்த தவெக...! இதுதான் காரணமா? அதிர்ச்சியில் முதல்வர் விஜய்!!!



tvk-vijay-party-old-administrators-discontent

தமிழக வெற்றிக் கழகத்தில் மாற்றுக்கட்சிகளில் இருந்து வந்தவர்களுக்கு தொடர்ந்து முக்கியத்துவம் வழங்கப்படுவதாக, கட்சியின் ஆரம்ப கால நிர்வாகிகள் அதிருப்தி தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக அதிமுக பின்னணியில் இருந்து வந்தவர்களுக்கு அரசு பதவிகள் வழங்கப்படுவது கட்சிக்குள் பேசுபொருளாகியுள்ளது. இதனால் நீண்ட காலம் விஜய் ரசிகர் மன்றத்தில் பணியாற்றிய நிர்வாகிகள் மத்தியில் அதிருப்தி அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

மாற்றுக்கட்சியினருக்கு அடுத்தடுத்து முக்கிய பொறுப்புகள்

முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன், அதிமுக முன்னாள் தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயலாளர் சிங்கை ராமச்சந்திரன் ஆகியோருக்கு அரசு பொறுப்புகள் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, தற்போது பிரபல நாட்டுப்புறப் பாடகர் புஷ்பவனம் குப்புசாமிக்கும் அரசு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அடுத்தடுத்து வெளியாகும் இந்த நியமனங்கள், கட்சியின் பழைய நிர்வாகிகள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளன.

இதையும் படிங்க: இனி இந்த தப்பை பண்ணக்கூடாது...! மதுராந்தகம், தாராபுரம் தேர்தல் கற்பித்த பாடம்... முதல்வர் விஜய் எடுத்த திடீர் முடிவு! அடுத்த அரசியல் வியூகம் இதுதான்...!!!

ரசிகர் மன்ற நிர்வாகிகள் அதிருப்தி

விஜய் ரசிகர் மன்றம் தொடங்கிய காலம் முதலே கட்சிக்காக உழைத்த தங்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்பதே சில மூத்த நிர்வாகிகளின் ஆதங்கமாக இருப்பதாக கூறப்படுகிறது. தேர்தல் பணிகள், கட்சி வளர்ப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளில் நீண்ட காலமாக ஈடுபட்டவர்களுக்கு பதிலாக, சமீபத்தில் இணைந்த மாற்றுக்கட்சியினருக்கு முக்கியத்துவம் கிடைப்பதாக அவர்கள் கருதுகின்றனர்.

கட்சிக்குள் இரு பிரிவுகள் 

இதனால் தமிழக வெற்றிக் கழகத்துக்குள் ‘அதிமுகவில் இருந்து வந்தவர்கள்’ மற்றும் ‘ரசிகர் மன்றக் கால நிர்வாகிகள்’ என இரு பிரிவுகள் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளதாக கவலை எழுந்துள்ளது. ஆரம்ப கட்டத்திலேயே இந்த அதிருப்தியை கட்சி தலைமை கவனத்தில் கொண்டு, நீண்ட காலம் பணியாற்றிய நிர்வாகிகளுக்கும் உரிய பொறுப்புகள் மற்றும் அங்கீகாரம் வழங்க வேண்டும் என மூத்த நிர்வாகிகள் எதிர்பார்ப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

இதையும் படிங்க: என்கிட்ட சொல்லாமல் இதை எப்படி நீங்க செய்யலாம்? ஆதவ் அர்ஜுனாவிடம் போனை போட்டு எகிறிய விஜய்! பின்னணி என்ன? கடும் கோபத்தில் முதல்வர் விஜய்!!!