என்கிட்ட சொல்லாமல் இதை எப்படி நீங்க செய்யலாம்? ஆதவ் அர்ஜுனாவிடம் போனை போட்டு எகிறிய விஜய்! பின்னணி என்ன? கடும் கோபத்தில் முதல்வர் விஜய்!!!
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் முதல் கட்டப் பிரச்சாரத்தை முடித்துள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டங்கள் தொடர்பான விமர்சனங்களால் அதிருப்தியடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உள்ளூர் மக்களுக்கு பதிலாக வெளி மாவட்டங்களில் இருந்து கட்சியினரை அழைத்து வந்து கூட்டத்தில் அமர வைத்ததாக எதிர்க்கட்சிகள் விமர்சனம் முன்வைத்துள்ளன.
பொதுக்கூட்டங்களில் வெளி மாவட்டத்தினர்?
மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டங்களில் உள்ளூர் மக்களின் பங்கேற்பு குறைவாக இருந்ததாகவும், வெளி மாவட்டங்களில் இருந்து கட்சியினரை வாகனங்களில் அழைத்து வந்து கூட்டத்தில் பங்கேற்கச் செய்ததாகவும் திமுக மற்றும் நாம் தமிழர் கட்சியினர் விமர்சித்துள்ளனர். இதற்காக சில ஆதாரங்களையும் அவர்கள் வெளியிட்டதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: விஷயத்தை சொல்லி சீக்கிரமா முடிங்க...! காதில் சொன்ன ரகசியம்...கதறி அழுத சத்தியபாமா! பிரச்சார மேடையில் இப்படி ஒரு ஆக்டிங்கா..? வைரல் வீடியோ...!!!
நிர்வாகிகளிடம் விஜய் கடும் கேள்வி
இதையடுத்து கட்சி நிர்வாகிகளான ஆதவ் அர்ஜுனா மற்றும் சி.டி.நிர்மல் குமார் ஆகியோரை தொலைபேசியில் தொடர்புகொண்ட விஜய், தொகுதி மக்களுக்கு முன்னுரிமை அளிக்காமல் வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்களை ஏன் அழைத்து வந்தீர்கள் என கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது. அதற்கு பதிலளித்த ஆதவ் அர்ஜுனா, உள்ளூர்வாசிகளுக்கு பாஸ் வழங்குவதில் ஏற்பட்ட சிக்கல்கள் மற்றும் வேட்பாளருக்கு எதிராக உருவாகக்கூடிய இடையூறுகளை தவிர்க்கும் நோக்கிலேயே இந்த ஏற்பாடு செய்யப்பட்டதாக விளக்கம் அளித்துள்ளார்.
மேலும், இந்த திட்ட மாற்றத்துக்கு ஜெகதீஸ் என்பவரே காரணமாக இருந்ததாகவும் விஜய்யிடம் தெரிவிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. நிர்வாகிகளின் விளக்கத்தை கேட்ட விஜய், அதன்பிறகு விவாதத்தை நீட்டிக்காமல் அடுத்த கட்ட பிரச்சாரத்துக்கான முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளார்.
இனி அந்தந்த தொகுதி மக்களுக்கு மட்டுமே முன்னுரிமை
இனிவரும் ரோட் ஷோ மற்றும் பிரச்சார நிகழ்ச்சிகளில் அந்தந்த தொகுதிகளைச் சேர்ந்த மக்களை மட்டுமே திரட்டி அழைத்து வர வேண்டும் என விஜய் கண்டிப்புடன் அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அடுத்தடுத்த பிரச்சாரங்களில் கூட்ட ஏற்பாடுகளில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக கட்சி வட்டாரங்களில் பேசப்படுகிறது.