நடிகர் விஜயை அசிங்கப்படுத்திய த.வெ.க நிர்வாகிகள்.? பாலியல் குற்றங்களுக்கு துணை போகும் "TVK"?!

விஜயின் தமிழக வெற்றி கழகத்தின் போஸ்டரில் அச்சிடப்பட்ட ஒரு தவறான வாக்கியத்தால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
மார்ச் 8ம் தேதியான இன்று சர்வதேச பெண்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது. பாலியல் குற்றங்களை தடுக்கும் பொருட்டு த.வெ.க சார்பில் மாநிலம் முழுவதும் விழிப்புணர்வு கருத்தரங்கங்கள் நிகழ்த்தப்பட்டு வருகிறது. மகளிரணி சார்பில் இந்த கருத்தரங்கங்கள் நடத்தப்பட்டது.
இந்த நிலையில் வேலூர் கிழக்கு மாவட்ட தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க வலியுறுத்தி இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கையெழுத்து இயக்கம் தொடங்கி வைக்கப்பட்டது. இதற்கான பேனரில், "we stand for women harassment" என்று ஒரு வாசகம் அச்சடிக்கப்பட்டு இருக்கிறது. பாலியல் குற்றங்களுக்கு துணை போவதாக இதன் அர்த்தம்.
இதையும் படிங்க: பாலியல் குற்றங்கள் அதிகரிப்பு.. விஜய் பிறப்பித்த அதிரடி ஆணை.!
உண்மையில் பாலியல் குற்றங்களுக்கு எதிராக நிற்கிறோம் என்பதற்கு, "we stand against women harassment" என்றுதான் அச்சடிக்கப்பட வேண்டும். இந்த போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் பரவி, "பாலியல் குற்றங்களுக்கு த.வெ.க துணை போகிறதா.?" என்ற கேலியை பெற்றுள்ளது.
இதையும் படிங்க: நடிகர் விஜயால், ஸ்டாலினுக்கு அடிக்கும் அதிர்ஷ்டம்.. உற்சாகத்தில் உடன்பிறப்புக்கள்.!