அம்மாடியோவ்.! விளம்பரம், பிரச்சார செலவு, விஜய்யின் ஃப்ளைட் டிக்கெட் எல்லாத்துக்கும் சேர்த்து இத்தனை கோடியா? தவெகவின் தேர்தல் கணக்கை பார்த்து அதிர்ச்சியில் உறைந்த அரசியல் களம்..!!!



tvk-election-campaign-expenses-19-81-crore

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலைத் தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழகம் தனது தேர்தல் பிரச்சாரச் செலவுக் கணக்கை தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்துள்ளது. கட்சியின் பொருளாளர் பி.வெங்கடரமணன் கையெழுத்திட்டுள்ள அறிக்கையில், தலைமை அலுவலகம் மூலம் மொத்தம் ரூ.19.81 கோடி செலவிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் ஊடக விளம்பரங்களுக்கு மட்டும் ரூ.6.35 கோடி செலவாகியுள்ளது. அச்சு, மின்னணு மற்றும் வானொலி விளம்பரங்கள் இதில் அடங்கும். மேலும், ஆதவ் அர்ஜுனாவின் ‘வாய்ஸ் ஆஃப் காமன் ஸ்ட்ரேடஜிக் கன்சல்டிங்’ நிறுவனத்துக்கு ரூ.1.79 கோடியும், புத்தகங்கள் உள்ளிட்ட விளம்பரப் பொருட்களுக்காக ரூ.40.55 லட்சமும் வழங்கப்பட்டுள்ளதாக கணக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: இது யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்..! இன்னும் 2 மாதத்தில் எடப்பாடி தான் முதல்வர்...! கொளத்தூருக்கு இடைத்தேர்தல் வரும்.... மாஃபா பாண்டியராஜன் போட்ட வெடிகுண்டுடால் அரசியலில் பரபரப்பு..!!!

விஜயின் விமானப் பயணத்துக்கு ரூ.3.55 கோடி

த.வெ.க. தலைவர் மற்றும் முதலமைச்சர் வேட்பாளரான சி.ஜோசப் விஜயின் தேர்தல் பிரச்சாரப் பயணங்களுக்கும் கணிசமான தொகை செலவிடப்பட்டுள்ளது. மார்ச் 14 முதல் ஏப்ரல் 28 வரையிலான காலகட்டத்தில் விஜயின் விமானப் பயணங்களுக்காக Taj Events, Chipsan Aviation மற்றும் Fly High Global Aircraft Management Services ஆகிய நிறுவனங்களுக்கு ரூ.3.55 கோடி செலுத்தப்பட்டதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கட்சியின் மற்ற தலைவர்களின் பயணங்களுக்காக செலவு செய்யப்பட்டதாக எந்தத் தொகையும் இந்தக் கணக்கில் பதிவாகவில்லை. அதேபோல், விஜய் போட்டியிட்ட பெரம்பூர் மற்றும் திருச்சி தொகுதிகளின் பிரச்சாரத் தேவைகளுக்காக ரூ.40 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுக்கூட்டங்கள், ரோடு ஷோக்களுக்கு ரூ.2.06 கோடி

தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக நடத்தப்பட்ட பொதுக்கூட்டங்கள் மற்றும் ரோடு ஷோக்களுக்கு ரூ.2.06 கோடி செலவிடப்பட்டுள்ளது. இதர பிரச்சாரச் செலவுகளாக ரூ.7.04 கோடி கணக்கு காட்டப்பட்டுள்ளது. மொத்த செலவின விவரங்கள் கட்சி தலைமை அலுவலகம் சார்பில் தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

பிற வேட்பாளர்களுக்கான செலவு இல்லை

அறிக்கையின்படி, வேட்பாளராகப் போட்டியிட்ட விஜய்க்கு நேரடியாக ரூ.40 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. அதேநேரம், த.வெ.க. சார்பில் போட்டியிட்ட பிற வேட்பாளர்களுக்காக கட்சி தலைமை அலுவலகத்திலிருந்து தேர்தல் செலவுகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனால், மற்ற தொகுதிகளில் போட்டியிட்ட வேட்பாளர்கள் தங்களது பிரச்சாரச் செலவுகளை தாங்களே ஏற்றுக்கொண்டதாக தேர்தல் செலவுக் கணக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் பிரச்சாரச் செலவு தொடர்பான இந்த விவரங்கள் தற்போது கட்சி தாக்கல் செய்துள்ள அதிகாரப்பூர்வ கணக்கின் மூலம் வெளியாகியுள்ளன.

 

இதையும் படிங்க: இது பயமா? இல்ல பதற்றமா? இரண்டு தொகுதிக்கே 11 அமைச்சர்கள்...! விஜய் அரசை அசால்ட்டாக எதிர்க்கும் எதிர்க்கட்சிகள்! உளவுத்துறை கொடுத்த ரகசிய ரிப்போர்ட்...!!!