என்னங்க இது? விஜய் கட்சி வேட்பாளருக்கு இப்படி ஒரு சோதனை!! குழப்பத்தில் தொண்டர்கள்..
2026 தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திருத்தணி தொகுதியில் புதிய அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சத்தியகுமார், தனியாகவே வீதிகளில் சுற்றி வாக்கு சேகரித்த காட்சி தற்போது சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்படுகிறது. வழக்கமான அரசியல் பரப்புரையிலிருந்து மாறுபட்ட இந்த அணுகுமுறை கவனம் ஈர்த்துள்ளது.

சத்தியகுமார் எளிமையான முறை
அரசியல் கட்சிகள் பொதுவாக பெரும் ஆதரவாளர்கள் கூட்டத்துடன் பிரச்சாரம் செய்வது வழக்கம். ஆனால், சத்தியகுமார் எளிமையான முறையைத் தேர்வு செய்துள்ளார். டீக்கடைகள், சாலைகள், சந்திப்புகள் போன்ற இடங்களில் பொதுமக்களை நேரடியாகச் சந்தித்து, “வெற்றி நிச்சயம்” என நம்பிக்கை தெரிவித்துக் கொண்டு வாக்கு கேட்டு வருகிறார். அவருடன் எந்த நிர்வாகிகளோ, தொண்டர்களோ இல்லாதது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: என்ன... இப்படி ஆச்சே! முதல் நாளில் விற்று தீர்த்த விருப்ப மனுக்கள்! ஆனால் பனையூருக்கு திரும்பாத.... விஜய்க்கு காத்திருந்த பேரதிர்ச்சி !!!
கட்சிக்குள் எழுந்த கேள்விகள்
இந்த தனி பரப்புரை முறையால் சத்தியகுமார் மீது கட்சிக்குள் சில கேள்விகள் எழுந்துள்ளன. வேட்புமனுத் தாக்கலின் போது நிர்வாகிகளை ஒருங்கிணைப்பதில் குறைபாடு இருந்ததாகவும், இளைஞர்கள் குறித்து சர்ச்சையான கருத்துக்கள் கூறியதாகவும் குற்றச்சாட்டுகள் கிளம்பியுள்ளன. இதனால் உட்கட்சியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

‘மக்களுடன் நேரடி தொடர்பு’ என விளக்கம்
இதையடுத்து, சத்தியகுமார் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் பிரச்சினைகளை நேரில் கேட்டு அறியவும், நெருக்கமான தொடர்பு உருவாக்கவும் தான் தனியாகப் பிரச்சாரம் செய்வதாக கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து கட்சித் தலைமையும் கவனம் செலுத்தியுள்ளதாக கூறப்படும் நிலையில், தேவையானால் விசாரணையும் நடத்தப்படலாம் எனக் கூறப்படுகிறது. திருத்தணி தொகுதி பரப்புரை தற்போது அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.
இதையும் படிங்க: அந்த விஷயத்தால் கண்ணீர் விட்ட பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த்.... தவெக கட்சிக்குள் அதிருப்தி! அடுத்தடுத்த அதிர்ச்சியில் விஜய்!!!