திரிஷா குறித்த ஆர்.பி. உதயகுமாரின் பேச்சு.. பதிலடியால் பரபரப்பு.!
தமிழகத்தில் தொடரும் அரசியல் விவாதங்கள் மக்கள் மத்தியில் சலசலப்பான மனநிலையை உண்டாக்கி இருக்கிறது.
பேச்சு:
Trisha Slams R.B. Udhayakumar: தூத்துக்குடியில் நடைபெற்ற அதிமுக கூட்டத்தில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், ஆளும் தவெக அரசுக்கு எதிராக பேசி இருந்தார். அதாவது, "நடிகை திரிஷாவுக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படலாம்" என விமர்சனம் செய்யும் வகையில் பேசி இருந்தார்.
இதையும் படிங்க: தனியார்மயம்? தமிழக அரசின் பட்ஜெட்டில் இடம்பெறப்போகும் அறிவிப்பு என்ன? எகிறும் எதிர்பார்ப்பு.!
சர்ச்சை:
ஏற்கனவே தமிழக அரசியலில் திரிஷா தொடர்பாக பல்வேறு பேச்சுக்கள் எழுந்து சர்ச்சையாகி வருகிறது. அரசியலுக்காக திரிஷாவின் பெயரை பலரும் உபயோகம் செய்வதாக சொல்லப்படுகிறது. இதனிடையே, ஆர்.பி. உதயகுமாரின் பேச்சும் எதிர்ப்பலையை சந்தித்தது.

கண்டனம்:
அதாவது, திரிஷாவின் ரசிகர்கள் மற்றும் நற்பணி மன்றத்தினர் இதுதொடர்பாக எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர். மதுரை திரிஷா நற்பணி மன்றம் சார்பில், ஆர்.பி. உதயகுமாருக்கு எதிராக பல இடங்களில் போஸ்டர்களும் ஒட்டப்பட்டு இருக்கின்றன.
திரிஷா பதிலடி:
இந்நிலையில், ஆர்.பி. உதயகுமாரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த நடிகை திரிஷா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "இந்த வயதில் நாடகமாடுவது அசிங்கம். பணம் சம்பாதித்து உங்கள் நிம்மதியை நீங்களே தேடிக்கொள்ளுங்கள்" என பதிவிட்டுள்ளார். இந்த பதிவு வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: அப்படிப்போடு.. முதல்வருக்கே மிரட்டலா? திமுக எம்.எல்.ஏ-வை வீடுபுகுந்து தூக்கிய போலீஸ்.!