அப்படிப்போடு.. முதல்வருக்கே மிரட்டலா? திமுக எம்.எல்.ஏ-வை வீடுபுகுந்து தூக்கிய போலீஸ்.!
தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜயை விமர்சனம் செய்ததாக திமுக எம்.எல்.ஏ கைதாகி இருக்கிறார்.
முதல்வர் விஜயின் ஆட்சி:
DMK MLA Arrested: 2026 சட்டப்பேரவை தேர்தலுக்குப்பின் தமிழ்நாட்டில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு முதல்வராக தவெக தலைவர் விஜய் ஆட்சி நடத்தி வருகிறார். தொடர்ந்து, ஆட்சியை இழந்த விரக்தியில் திமுகவும், ஆட்சிக்கு வரமுடியாமல், கட்சிக்குள் நடக்கும் பிரச்சனையால் பரிதவிப்பில் அதிமுக உள்ளிட்ட கட்சிகள் இருந்து வருகின்றன.
இதையும் படிங்க: JCD Prabhakar: அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஜேசிடி பிரபாகர் தவெகவில் இணைந்தார்.. தமிழக அரசியலில் அடுத்த ஷாக்.!

சர்ச்சை பேச்சு:
இதனிடையே, திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் தமிழ்நாடு முதல்வர் விஜய் குறித்து சில நாட்களுக்கு முன்னர் சர்ச்சைக்குரிய வகையில் பேசி இருந்தார். இதுதொடர்பாக காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டு இருந்தது. விளாத்திகுளத்தில் கடந்த சனிக்கிழமையன்று நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் மார்க்கண்டேயன் விஜயை விமர்சித்து பேசி இருந்தார்.

அதிரடி கைது:
இந்த விஷயத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில், இன்று காலை தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் வீட்டுக்குச் சென்ற காவல்துறையினர், அவரை அதிரடியாக கைது செய்தனர். இந்த கைது நடவடிக்கை தமிழக அரசியலில் முக்கிய செயலாக கவனிக்கப்படுகிறது.
திமுக எம்.எல்.ஏ கைது வீடியோ:
Good News! 🚨
— Sivasakthi TVK 🇪🇦 (@Sivasak71673789) July 20, 2026
முதல்வருக்கு மிரட்டல் விடுத்த திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் கைது 👌🔥@TVKVijayHQ | @CMOTamilnadu pic.twitter.com/0aPiGGxKj3
இதையும் படிங்க: "முடத்தெங்கு" தவெக கூட்டணிக்கட்சிகளை விமர்சித்த திமுக ஆ. ராசா.. பதிலடி கருத்துக்களால் போர்க்களம்.!