JCD Prabhakar: அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஜேசிடி பிரபாகர் தவெகவில் இணைந்தார்.. தமிழக அரசியலில் அடுத்த ஷாக்.!
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் முன்னிலையில், அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஜேசிடி பிரபாகர் தவெகவில் இணைந்தார்.
தமிழக அரசியலில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள 2026 தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில், விஜயின் அரசியல் பிரவேசம் தொடர்ந்து கவனிக்கப்படுகிறது. அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவராக கவனிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், அதிமுக தலைமையுடன் கொண்ட கருத்து வேறுபாட்டுக்கு பின்னர் தவெகவில் இணைந்து இருந்தார்.

தவெகவுக்கு குவியும் ஆதரவு:
அதனைத்தொடர்ந்து, அதிமுக உட்பட பல கட்சிகளைச் சேர்ந்தவர்களும் அடுத்தடுத்து தவெகவில் இணைந்து வருகின்றனர். அதிமுகவின் மூத்த தலைவர் செங்கோட்டையன் தவெகவில் தன்னை இணைத்துக்கொண்ட பின்னர், அதிமுகவில் அதிருப்தியில் இருக்கும் பலரும் தவெகவுக்கு வருவார்கள் என தெரிவித்து இருந்தார். ஓ. பன்னீர் செல்வத்தின் பெயர் அந்த இடத்தில் சொல்லப்பட்டாலும், அவர் தரப்பில் இந்த விஷயத்தை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யவில்லை.
இதையும் படிங்க: #Breaking: அதிமுக தலைமைக்கு பேரிடி.. திமுகவுக்கு தாவிய Ex எம்எல்ஏ.. சூடு பிடிக்கும் தமிழக அரசியல்.!

ஜேசிடி பிரபாகர் தவெகவில் இணைவு:
இந்நிலையில், அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. ஜேசிடி பிரபாகர் தன்னை விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்துகொண்டார். தமிழகத்தில் 2026ல் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என களமிறங்கியுள்ள விஜய்க்கு பலரும் ஆதரவு தெரிவிக்கும் விதமாக, அதிமுகவில் இருந்து பல புள்ளிகள் அடுத்தடுத்து தவெகவில் இணைவது கவனம் பெற்றுள்ளது.
BREAKING 🚨
— 𝐓𝐕𝐊 𝐕𝐈𝐉𝐀𝐘 𝐂𝐀𝐃𝐑𝐄𝐒 (@TVKVijayCadres) January 2, 2026
அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஜேசிடி பிரபாகர் #தவெக வில் இணைந்தார் !!@TVKVijayHQ pic.twitter.com/8vPm5Dm82r
இதையும் படிங்க: வசைபாடி ஒதுக்கிய திமுக.. வாய்ப்பு கொடுத்த விஜய்.. மனம் திறந்த நாஞ்சில் சம்பத்.!