#Breaking: அதிமுக தலைமைக்கு பேரிடி.. திமுகவுக்கு தாவிய Ex எம்எல்ஏ.. சூடு பிடிக்கும் தமிழக அரசியல்.!
அதிமுக முன்னாள் எம்எல்ஏ சின்னசாமி சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் இன்று திமுகவில் இணைந்தார்.
அதிமுக முன்னாள் எம்எல்ஏ சின்னசாமி முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவில் இணைந்தார். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதியில் எம்எல்ஏவாக இருந்தவர் சின்னசாமி. இவர் அதிமுகவில் இணைந்து பின்னர் 2021, 2026 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் பங்கேற்று 2 முறை எம்எல்ஏவாக தேர்வாகினார்.
கோடிக்கணக்கில் கையாடல்:
இதனை தொடர்ந்து அதிமுக தொழிற்சங்க பேரவை செயலாளராக இருந்தவர் கோடிக்கணக்கில் கையாடல் செய்ததாக எழுந்த புகாரின் பேரில் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனால் எடப்பாடி பழனிச்சாமி அவரை அதிமுகவிலிருந்து நீக்கி உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: 20 வயதில் அரசியல் பயணம் தொடங்கி... 50 ஆண்டு அரசியல் அனுபவம்! உங்கள் அனுபவம் கட்சிக்கு உறுதுணை! செங்கோட்டையன் குறித்து விஜய் வெளியிட்ட வீடியோ!
கோவை அதிமுக முன்னாள் MLA சின்னசாமி திமுகவில் அண்ணன் @V_Senthilbalaji அவர்களின் முன்னிலையில் தளபதி தலைமையில் இணைந்தார்... pic.twitter.com/CnQPfVwXyI
— sri vigneswaran DMK (@VickyT82279284) December 3, 2025
திமுகவில் இணைந்தார் அதிமுக முன்னாள் எம்எல்ஏ சின்னசாமி:
இதன் பின்னர் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பாஜகவில் இணைந்து பின் மீண்டும் அதிமுகவில் இணைந்து செயல்பட்டார். இந்த நிலையில் இன்று சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார்.
தமிழக அரசியலில் பரபரப்பு:
முன்னதாக அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தது தமிழக அரசியலில் பரபரப்பை கிளப்பி இருந்த நிலையில், தற்போது அதிமுக முன்னாள் எம்எல்ஏ திமுகவில் இணைந்துள்ளது பேசு பேசுபொருளாகியுள்ளது.
இதையும் படிங்க: இபிஎஸ் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்ற நபர் மயங்கி விழுந்து உயிரிழப்பு.. கோபியில் சோகம்.!