14 வயது சிறுமி மீது வக்கிர எண்ணம்.. கட்டிப்போட்டு கொடூரம்.. சென்னையில் திக்., திக்.. பெண்களே உஷாரா இருங்க.!
அக்காவோட வருங்கால கணவர் தான் என மாணவியை அழைத்துச் சென்ற காமுகன் இழைத்த கொடூரத்தை விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
சிறுமிக்கு கடும் வயிற்று வலி:
Chennai News Today: சென்னையில் செயல்படும் அரசுப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயின்று வரும் 14 வயதுடைய சிறுமி, சம்பவத்தன்று கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டுள்ளார். இதனால் சிறுமியின் தாய் மகளுடன் மருத்துவமனைக்கு சென்ற நிலையில், அங்கு சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளதை உறுதி செய்துள்ளனர். இதனையடுத்து, தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், சிறுமியிடம் விசாரணை நடத்தியபோது அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: தொழுகை சொல்லிக்கொடுப்பதாக 13 வயது சிறுவன் பாலியல் வன்கொடுமை.. மசூதியில் அதிர்ச்சி செயல்.!
அக்காவின் வருங்கால கணவர்:
சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த சிறுமிக்கு 20 வயதுடைய சகோதரி இருக்கிறார். இவர் அரசுக்கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறார். இந்த சகோதரிக்கு, அதே கல்லூரியில் பயின்று வரும் சீனியர் மாணவர் சிலம்பரசனுடன் நட்பு ஏற்பட்டு காதலாக மாறி இருக்கிறது. இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில், இருவரின் காதல் விவகாரம் வீட்டுக்கு தெரியவந்துள்ளது. அவர்கள் படிப்பு முடிந்ததும் திருமணம் செய்துகொள்ளலாம் என சம்மதம் தெரிவித்துள்ளனர்.

நயவஞ்சக எண்ணம்:
இதனிடையே, சிலம்பரசன் மாமியார் வீட்டுக்கு வந்து செல்வார் என கூறப்படுகிறது. அப்போது, மனைவியின் தங்கை மீது தவறான எண்ணம் கொண்டுள்ளார். சம்பவத்தன்று காலை நேரத்தில் மாமியாரின் வீட்டுக்குச் சென்ற சிலம்பரசன், சிறுமியை இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு அழைத்துச் செல்வதாக கூறி இருக்கிறார். அக்காவின் வருங்கால கணவர் தானே என்ற முறையில், சிலம்பரசனை நம்பி சிறுமி சென்றுள்ளார். வழியில் சிலம்பரசன் கடையில் ஜூஸ் வாங்கி கொடுத்து, இன்று பள்ளிக்குச் செல்ல வேண்டாம். எனது அக்கா உன்னை அழைத்து வரச்சொன்னதாக கூறியுள்ளார்.
சிறுமி வன்கொடுமை:
சிறுமி முதலில் வேண்டாம் என்று சொன்னாலும், பின் சிலம்பரசன் வற்புறுத்தலால் பள்ளிக்கு விடுமுறை எடுத்து சென்றுள்ளார். சிலம்பரசன் தனது வீட்டுக்கு சிறுமியை அழைத்துச் சென்றபோது, அங்கு சிலம்பரசனின் அக்கா இல்லை. இதுகுறித்து சிறுமி கேட்டபோது அக்கா வெளியே சென்றுள்ளதாக கூறியவர், திடீரென சிறுமியை நாற்காலியில் தள்ளி கயிற்றால் கட்டிபோட்டுள்ளார். பின் சிறுமியை வன்கொடுமை செய்துள்ளார்.
அம்பலமான உண்மை:
சிறுமியின் கை-கால்களை கட்டிப்போட்டு, வாயில் துணியை வைத்து அடைத்து பாலியல் வன்கொடுமை கொடூரம் நடந்துள்ளது. மேலும், இதுகுறித்து வெளியே கூறினால் எனக்கு அசிங்கம் இல்லை. உனது அம்மா-அப்பா தான் தற்கொலை செய்துகொள்வார்கள் என பயம் காண்பித்து இருக்கிறான். சிறுமியும் பயத்தில் அமைதியாக இருந்துள்ளார். ஆனால், சிறுமிக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டு மருத்துவமனைக்கு சென்றபோது உண்மை அனைத்தும் அம்பலமாகியுள்ளது.
திடுக் வாக்குமூலம்:
இந்த விஷயம் குறித்து வழக்குப்பதிவு செய்து சிலம்பரசனை கைது செய்த காவல்துறையினர் சிறையில் அடைத்தனர். அதிகாரிகள் சிலம்பரசனிடம் விசாரணை நடத்தியபோது, "சிறுமியின் அக்காவை தான் காதலித்தாலும், சிறுமியின் மீது ஆசை இருந்ததாகவும், இதனால் அவரை வன்கொடுமை செய்ததாகவும்" வாக்குமூலம் அளித்து அதிர்ச்சி தந்துள்ளார்.
சிறுமிகள் யாரையும் கண்மூடித்தனமாக நம்பக்கூடாது என்பதற்கு உதாரணமாக இந்த துயரம் அரங்கேறி இருக்கிறது.
இதையும் படிங்க: பள்ளி மாணவியை வீட்டுக்கு அழைத்து பாதிரியாரின் பகீர் செயல்.. போக்ஸோவில் தூக்கிய காவல்துறை.!