மாங்கல்யம் தரும் சுமங்கலி விரதம்.. நாளை தவறவிடாதீங்க பெண்களே.. முழு விபரம்..!
சுமங்கலி பூஜை 2026: பெண்கள் சுமங்கலி விரதம் கடைபிடிக்கலாம்.
நல்ல ஆயுள் வேண்டி விரதம்:
Sumangali Vratham: சாவித்ரி விரதம், காரடையான் நோன்பு, சுமங்கலி விரதம் என அழைக்கப்படும் விரதம் பெண்கள் தங்களது கணவரின் ஆயுள் அதிகரிக்கவும், குடும்பம் சிறந்து விளங்கவும் கடைபிடிக்கின்றனர். 2026ம் ஆண்டுக்கான சுமங்கலி விரதம் மார்ச் 14, 2026 அன்று சனிக்கிழமை வருகிறது. மாசி மாதத்தின் நிறைவு மற்றும் பங்குனி மாதத்தின் தொடக்கம் இணையும் தருணத்தில் சுமங்கலி விரதம் வரும். கணவன்-மனைவி இடையே ஒற்றுமை மேலோங்கவும், கணவர் நல்ல ஆயுளுடன் இருக்கவும், குழந்தைகள் மற்றும் குடும்பம் ஆரோக்கியத்துடன் இருக்கவும் பெண்கள் சுமங்கலி விரதத்தை மேற்கொள்வார்கள். இந்த விரதம் இருக்க முடியாதவர்கள் காமாட்சி அம்மனை வழிபாடு செய்தாலும் நல்லது.
இதையும் படிங்க: சுமங்கலி வரத்தை தரும் காரடையான் நோன்பு 2026 எப்போது? முழு விபரம் இதோ.!

வழிபாடு & நல்லநேரம்:
தாலிக்கயிறு மாற்ற நினைப்பவர்கள் காலை 07:35 மணிமுதல் 08:20 வரையிலும், மாலை 06:00 மணி முதல் 08:00 மணிவரையிலும் மாற்றலாம். பங்குனி பிறக்கும் தருணத்தை வைத்து தாலி மாற்றுவார்கள் இரவு 09:00 மணிமுதல் 10:00 மணிவரை மாற்றம் செய்யலாம். வீட்டில் காமாட்சி அம்மனுக்கு பூஜை செய்வது, வெல்லம் சேர்த்த இனிப்பு, கார அடை, வாழைப்பழம், வெற்றிலை, பாக்கு சேர்த்து படைப்பது நல்லது. உருகாத வெண்ணெய் முக்கியம். இந்த வழிபாட்டின்போது, "உருகாத வெண்ணெய்யும் ஓராடையும் நான் நூற்றேன், ஒருகாலும் என் கணவர் என்னை விட்டு பிரியாதிருக்க வேண்டும்" என மந்திரம் சொல்ல வேண்டும்.
பூஜைக்கு பின்னர் கணவரிடம் இருந்து புதிய மஞ்சள் சரடை கட்டிக்கொண்டு, தாலியில் குங்குமம் இட்டு ஆசி வாங்கலாம். வீட்டில் இருக்கும் மூத்த சுமங்கலி பெண்களின் ஆசி வாங்குவதோடு, பிற சுமங்கலிகளுக்கு தாம்பூலம் கொடுத்து ஆசி பெறலாம்.
இதையும் படிங்க: ஸ்ரீ ராம நவமி 2025 எப்போது? பூஜை நேரம், வழிபடும் முறை.. முழு விபரம் இதோ.!